ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர் விலை (Gas Cylinder Price) முதல் ஆதார் கார்டு (Aadhaar Card), பான் கார்டு (PAN Card) ஆகியவற்றில் முக்கிய மாற்றங்கள் ஏற்படும். தற்போது 2025, நவம்பர் மாதம் முடிவடையும் நிலையில் உள்ளது. இன்னும் ஒருசில நாட்களில் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது. இந்த நிலையில், டிசம்பர் மாதத்தில் கேஸ் சிலிணட்ர் விலை, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட உள்ளதாக கூறப்படுகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
டிசம்பர் மாதம் அமலுக்கு வர உள்ள முக்கிய மாற்றங்கள்2025, டிசம்பர் மாதத்தில் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம், ஆயுள் சான்றிதழ், பான் கார்டு, கேஸ் சிலிண்டர் விலை ஆகியவற்றில் மாற்றம் ஏற்பட உள்ளது.
கேஸ் சிலிண்டர் விலைஎண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் விலையில் மாற்றம் செய்யும். இதன் காரணமாக கேஸ் சிலிண்டர் விலையில் ஏற்றமும், இறக்கமும் ஏற்படும். நவம்பர் 1, 2025 அன்று வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.6.50 வரை குறைந்த நிலையில், டிசம்பர் 1, 2025 அன்று சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : Micro Payments உங்களது சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்வதற்கான கடைசி தேதி நவம்பர் 30, 2025 ஆக உள்ளது. தேசிய ஓய்வூதிய அம்சமான NPS-ன் கீழ் ஊழியர்களுக்கு UPS விருப்பமாக அளிக்கப்படுகிறது. அதனை தேர்தெடுக்கும் வாய்ப்பு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே ஊழியர்கள் அந்த அம்சத்தை தேர்வு செய்ய வேண்டும் என்றால் அவர்கள் நவம்பர் 30, 2025-க்குள்ளாகவே செய்து முடிக்க வேண்டும்.
பான் கார்டுஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் டிசம்பர் 31, 2025-க்குள் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்கவில்லை என்றால் பான் காட்டு முடக்கப்படும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது.
இதையும் படிங்க : இனி மோசடி, ஸ்பேம் கால்கள் குறித்து கவலை இல்லை.. ஆதாரை மையப்படுத்தி அசத்தல் அம்சத்தை சோதனை செய்யும் அரசு!
ஆயுள் சான்றிதழ்ஓய்வூதியம் பெரும் நபர்கள் தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. ஓய்வூதிய தாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அந்த வகையில் இந்த ஆண்டு ஓய்வூதிய தாரர்கள் தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க நவம்பர் 30, 2025 கடைசி தேதியாக உள்ளது.