திரையுலக இயக்குநரும், நடிகருமான ராஜகுமாரன், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
தனது பிரத்யேகப் பேட்டி ஒன்றில் பேசிய ராஜகுமாரன், நடிகை தேவயானி பிறந்த நாளும், விஜய் பிறந்த நாளும் ஜூன் 22 என்பதால் தான், இருவரும் இன்னும் திரையுலகில் உச்சத்தில் இருக்கிறார்கள் என்று ஒரு சுவாரஸ்யமான கருத்தைத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ராஜகுமாரன், “விஜய்யை நாங்கள் திரையுலகில் பொத்திப் பொத்திப் பூங்கொத்து போல் 30 வருடம் பாதுகாத்தோம். அவர் இப்போது வெயிலில் மக்களோடு எப்படி நிற்பார்? முதலமைச்சர் ஸ்டாலின் போல அவரால் தெருவில் நடக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார். அத்துடன், “விஜய் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைக்கவில்லை என்றால், டெபாசிட் கூட வாங்க முடியாது” என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
“>