Keerthy Suresh: கோலமாவு கோகிலா படமும் ரிவால்வர் ரீட்டா படமும் ஒன்னா? விளக்கம் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!
TV9 Tamil News November 27, 2025 08:48 PM

நடிகை கீர்த்தி சுரேஷ் (keerthy Suresh) தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நாயகியாக இருந்துவருகிறார். இவருக்கு கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருமணம் முடிந்த நிலையில், திருமணத்திற்கு பிறகும் நடிகர்களுக்கு ஜோடியாக படங்களில் நடித்துவருகிறார். மேலும் பெண்களை மையமாக உருவாகும் கதாபாத்திரங்கள் கொண்ட படங்களை தேர்வுசெய்து நடித்துவருகிறார். அந்த வகையில் இவர் நடித்திருக்கும் படம்தான் ரிவால்வர் ரீட்டா (Revolver Rita). இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஜே.கே.சந்துரு (JK.Chandru) இயக்க, பேஷன் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படமானது வரும் 2025 நவம்பர் 28ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், ராதிகா சரத்குமார் (Rathika Sarathkumar) , சுனில் (Sunil) மற்றும் சென்றாயன் உட்பட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியான தருணத்தில் இப்படத்தின் கதையைப் பார்ப்பதற்கு “கோலமாவு கோகிலா” (Kolamaavu Kokila) படத்தின் கதையைப் போல இருப்பதாக பல விமர்சனங்கள் வந்திருந்தது. இந்நிலையில் அந்த விமர்சனங்களுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: விஜய் சேதுபதி குறித்து புகழ்ந்து பேசிய நெல்சன் திலீப் குமார் – வைரலாகும் வீடியோ

ரிவால்வர் ரீட்டா படத்தின் கதை குறித்து ரசிகர்களுக்கு விளக்கம் கொடுத்த கீர்த்தி சுரேஷ் :

சமீபத்தில் படத்தின் ப்ரோமோஷன் தொடர்பாக நேர்காணலில் பேசிய கீர்த்தி சுரேஷ் அதில்,”இந்த ரிவால்வர் ரீட்டா படத்தின் ட்ரெய்லர் வெளியான சமயத்தில் பலரும் இந்த படத்தை கோலமாவு கோகிலா படத்துடன் ஒப்பிட தொடங்கிவிட்டனர். ஆனால் இந்த படம் ஒரு டார்க் காமெடி கதை மற்றும் அமைப்பு சார்ந்த படமாகும்.

இதையும் படிங்க: ஏ.ஆர்.ரகுமானை அடிக்க வேண்டும் என்ற அளவிற்கு அவர் மீது கோபம் வந்தது – ராம் கோபால் வர்மா

இந்த அமைப்புதான் அந்த படத்துடன் ஒப்பிட வைக்கிறது. உண்மையிலே ரிவால்வர் ரீட்டா படத்தின் ஷூட்டிங்கிற்கு முன் கோகோ படத்தை பார்த்தேன். ரிவால்வர் ரீட்டா படமானது ஒருநாளில் நடக்கும் கதையை அடிப்படையாக கொண்டுள்ளது. முதல் நாள் மதியத்தில் தொடங்கி மறுநாள் மதியம் வரை என்ன நடக்கிறது என்பதுதானே கதையே. இந்த இரு படங்களுக்கும் நிச்சயம் பல வித்தியாசம் இருக்கிறது” என்றார் அதில் அவர் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

ரிவால்வர் ரீட்டா திரைப்படம் குறித்து கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

Into the world of #RevolverRita 🔥#RevolverRitaTrailer
Tamil ▶️ https://t.co/EUAnI1lVUi

Telugu ▶️ https://t.co/5tC20uxoLw@Jagadishbliss @Sudhans2017 @realradikaa @dirchandru @PassionStudios_ @TheRoute @RSeanRoldan @dineshkrishnanb @Cinemainmygenes @dhilipaction @mkt_tribe… pic.twitter.com/GiRNa1Pt0G

— Keerthy Suresh (@KeerthyOfficial)

கீர்த்தி சுரேஷின் இந்த படம் நாளை 2025 நவம்பர் 28ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படமானது முற்றிலும் வித்தியாசமான கதையில் உருவாகியுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை  ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.