முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்தை மணமுடித்த நடிகை சம்யுக்தா – வைரலாகும் போட்டோஸ்
TV9 Tamil News November 27, 2025 08:48 PM

இந்தியாவில் பிரபல மாடலாக வலம் வருபவர் சம்யுக்தா. இவர் தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே நன்கு பரிச்சையமானார். இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற சம்யுக்தா சின்னத்திரையில் பல ரியால்ட்டி ஷோக்களில் பங்கேற்று வந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான தனுஷ ராசி நேயர்களே என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அண்ணியாக நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார் நடிகை சம்யுக்தா. அதன்படி தமிழில் முன்னணி நடிகர்கள் பலரின் நடிப்பில் வெளியான காஃபி வித் காதல் படத்தில் நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவியாகவும் நடிகர்கள் ஜீவா மற்றும் ஜெய் ஆகியோரின் அண்ணியாகவும் நடிகை சம்யுக்தா நடித்து இருந்தார். இதில் இவரது கதாப்பாத்திரம் சிறப்பாக இருந்ததைத் தொடர்ந்து விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பு சம்யுக்தாவிற்கு கிடைத்தது.

அதன்படி தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடிகர் ஷ்யாமிற்கு ஜோடியாகவும் நடிகர் விஜயின் அண்ணியாகவும் நடிகை சம்யுக்தா நடித்து இருந்தார். இந்தப் படத்தில் நடிகை சம்யுக்தாவின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்தப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சம்யுக்தா பிக்பாஸில் கலந்துகொள்ளும் போதே சிங்கிள் மதராக இருப்பதை வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். இவரது திருமண வாழ்க்கையில் பல ஏமாற்றங்களை சந்தித்ததால் தனது மகனுடன் தனியாக வாழ்ந்து வருவதையும் அவர் வெளிப்படையாக தெரிவித்து இருந்தார்.

கிரிக்கெட்டரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்ட சம்யுக்தா:

இந்த நிலையில் சமீப காலமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த் உடன் சம்யுக்தா காதலில் இருப்பதாக இணையத்தில் கிசுகிசுக்கள் வெளியாகி வைரலாகி வந்தது. அதனை உறுதி செய்யும் விதமாக நடிகை சம்யுக்தா வெளியிட்ட தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள் மற்றும் தனது மகனின் பிறந்த நாள் விழா கொண்டாட்ட புகைப்படங்களில் அனிருதா ஸ்ரீகாந்த் உடன் இருப்பது போன்று தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.

இந்த பதிவுகள் அனைத்தும் அவர்களின் காதலை உறுதி செய்யும் விதமாகவே இருந்தது. இந்த நிலையில் இன்று 27-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொண்ட நிலையில் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… தனது ரேஸ் காருடன் அஜித் குமார் கொடுத்த மாஸான போஸ்… இணையத்தில் வைரலாகும் போட்டோ

இணையத்தில் வைரலாகும் சம்யுக்தாவின் திருமண புகைப்படங்கள்:

View this post on Instagram

A post shared by Samyuktha Shanmughanathan (@samyuktha_shan)

Also Read… அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ள ஃபேமிலி மேன் சீசன் 3 எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.