செங்கோட்டையன் தவெக உயர்மட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் – விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! அதிமுகவிலிருந்து நீக்கம், எம்எல்ஏ பதவி ராஜினாமா – அரசியல் பாதையில் புதிய திருப்பமாக, முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று(நவ. 27) சென்னை பனையூரில் நடைபெற்ற நிகழ்வில் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். பலர் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அவருக்கு வழங்கப்படும் பதவி குறித்த அறிவிப்பு மாலை நேரத்திலேயே வெளியானது.
செங்கோட்டையனை தவெக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக விஜய் நியமித்ததுடன், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி மாவட்டங்களின் அமைப்புச் செயலாளராகவும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் வளர்ச்சிக்கும், அரசியல் செயல்பாடுகளுக்கும் செங்கோட்டையன் வழிகாட்டியாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவருடன் தவெகவில் இணைந்த முன்னாள் எம்.பி. சத்தியபாமா, முன்னாள் எம்.எல்.ஏக்கள் வெங்கடாசலம், முத்துக்கிருஷ்ணன் உட்பட புதிய இணைபுகள் அனைவரையும் விஜய் வரவேற்று வாழ்த்து தெரிவித்துள்ளார். கட்சித் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அறிவிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!