டிட்வா புயல் வலுப்பெற்று வருவதோடு, கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் கனமழை, புயல் காற்று வீசும் நிலையில் அரசு பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. புயல் தாக்கம் அதிகம் இருக்கும் பகுதிகளை முன்னிட்டு 16 மாவட்டங்களில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையின் 30 சிறப்பு குழுக்கள் முழுத் தயார்நிலையில் களமிறக்கப்பட்டுள்ளன.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் NDRF படையினர் முன்கூட்டியே முகாமிட்டுள்ளனர். அதேபோல், கடலோரப் பகுதிகளில் வெள்ளப் பிரச்சகம், மரம் உதிர்வு, மின்கம்பி சேதம் போன்ற அவசர சூழ்நிலைகளுக்கு விரைவான மீட்பு மற்றும் உதவிப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதேநேரம், கடலோர மாவட்டங்களில் இருக்கும் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் பாதுகாப்பாக கரையோரத்தில் இருப்பதற்காக வானிலை ஆய்வு மையம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த 48 மணி நேரம் முக்கியமானதாக இருக்கும் நிலையில், அரசு மற்றும் பேரிடர் மீட்புப் படைகள் முழுமையாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.புயல் மேலும் வலுப்படும் சூழலில், மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், அதிகாரிகள் வெளியிடும் வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்றவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!