Vaa Vaathiyaar: 'ஆலாபிக்கி உம்மக்'.. வெளியானது கார்த்தியின் 'வா வாத்தியார்' பட 2வது பாடல்!
TV9 Tamil News November 28, 2025 12:48 AM

இயக்குநர் நலன் குமாரசாமியின் (Nalan Kumaraswamy) இயக்கத்தில் நடிகர் கார்த்தி (Karthi) நடித்துவந்த திரைப்படம்தான் வா வாத்தியார் (Vaa Vaathiyaar). இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட நிலையில், இந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் கார்த்தி நடித்திருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி(Krithi Shetty) நடித்துள்ளார். இந்த படமானது ஒரு எம்ஜிஆர் ரசிகரின் மகனின் கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் (Santhosh Narayanan) இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து ஏற்கனவே “உயிர் பத்திக்காம” என்ற முதல் பாடல் வெளியாகியிருந்தது.

அந்த பாடலை தொடர்ந்து தற்போது 2வது பாடல் வெளியாகியுள்ளது. “ஆலாபிக்கி உம்மக்” (Aalapikkey Ummak) என்று தொடங்கும் லிரிக்கல் வீடியோ பாடல் தற்போது கார்த்தியின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. இந்த படத்திலில் நடிகர் கார்த்தி நடனமாடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: அனுபமா பரமேசுவரனி லாக்டவுன் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட விஜய் சேதுபதி!

வா வாத்தியார் பட 2வது பாடல் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :

Arrest your stress 🤝 Activate the vibe 🕺@Karthi_Offl‘s Aura × #SaNa’s Sonic Fire#AalapikkeyUmmak from #VaaVaathiyaar is here to rule your Playlist

Out Now 🔗https://t.co/2QdZm4cml8

🎤 #Kelithee #SanthoshNarayanan
📝#Kelithee

A #NalanKumarasamy Entertainer
A… pic.twitter.com/3Xbf8KSl1W

— Studio Green (@StudioGreen2)

கார்த்தியின் வா வாத்தியார் பட ரிலீஸ் தேதியில் மாற்றமா?

நடிகர் கார்த்தியின் இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இந்த வா வாத்தியார் படத்தில் இவர்கள் இணைந்து நடித்திருக்கும் நிலையில், இவர்களுடன் நடிகர்கள் ராஜ் கிரண், சத்யராஜ், ஆனந்தராஜ், கருணாகரன், வடிவுக்கரசி என பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படம் ஒரு எம்ஜிஆர் ரசிகனை மையமாக உருவாக்கப்பட்டிருக்கும் கதையாகும்.

இதையும் படிங்க: அதெல்லாம் வாழ்க்கையில் ஒருமுறைதான் பண்ணமுடியும்… ஆண்ட்ரியா சொன்ன விஷயம்!

இந்த படத்தில் நடிகர் கார்த்தி அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வரும் 2025 டிசம்பர் 5ம் தேதியில் வெளியாகும் என படக்குழு முதலில் அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கிய நிலையில், இந்த வார இறுதியில்தான் நிறைவடைகிறது. இதன் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவது உறுதியாகியுள்ளது. அதன்படி வரும் 2025 டிசம்பர் 18 அல்லது டிசம்பர் இறுதியில் இப்படம் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.