அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் நக்சலைட் செறிவு முழுமையாக நீக்கப்பட்ட இந்தியாவை உருவாக்க மத்திய அரசு இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறது. மாநில அரசுகளின் உதவியுடன் மறுவாழ்வு திட்டங்கள் விரிவாக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆயுதப் போராட்டத்தை விட்டு நக்சலைட்டுகள் சரணடையும் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இன்று பிஜாப்பூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் 12 பெண்கள் உட்பட 41 பேர் அரசியலமைப்பின் மீது நம்பிக்கை வைத்து, ஜனநாயக வாழ்வைத் தேர்வு செய்வதாக உறுதி தெரிவித்தனர்.

மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ஒவ்வொருவருக்கும் ரூ.50 ஆயிரம் உடனடி நிதி உதவி வழங்கப்பட்டது. மேலும், சரணடைந்தவர்களில் 8 பேருக்கு தலா ரூ.8 லட்சம், 3 பேருக்கு தலா ரூ.5 லட்சம், 12 பேருக்கு தலா ரூ.2 லட்சம், 8 பேருக்கு தலா ரூ.1 லட்சம் என முன்பே அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகைகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதேபோன்று நேற்று நாராயண்பூரில் 19 பெண்கள் உட்பட 28 நக்சலைட்டுகள் சரணடைந்தனர்; இதில் 22 பேரின் தலைக்கு மொத்தம் ரூ.89 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு முதல் பிஜாப்பூரில் மட்டும் 790 நக்சலைட்டுகள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர். அதேகாலத்தில் நடைபெற்ற தனித்தனி என்கவுன்டர்களில் 202 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்; 1,031 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் சத்தீஷ்கரில் மட்டும் 2,200-க்கும் மேற்பட்டோர் சரணடைந்துள்ளதால் அரசு இலக்கு நோக்கி முன்னேறி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!