அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை எடப்பாடி பழனிச்சாமி கட்சியிலிருந்து நீக்கிய நிலையில் நேற்று அவர் தன்னுடைய கோபி எம்எல்ஏ பதிவியை ராஜினாமா செய்தார். தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன் தற்போது தமிழக வெற்றி கழகத்தில் அதிகாரப்பூர்வமாக விஜய் முன்னிலையில் இணைந்து விட்டார்.
அவருடன் அதிமுக முன்னாள் எம்பி சத்திய பாமா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர். இதேபோன்று புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் மற்றும் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹசானா உள்ளிட்டோரும் இணைந்தனர். மேலும் தமிழக வெற்றிக்கழகத்தில் சேர்ந்த செங்கோட்டையனுக்கு ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.