அவருக்கு சினிமா என்றாலே ரொம்பப் பிடிக்கும்.. எஸ்.ஜே. சூர்யாவை புகழ்ந்த கீர்த்தி ஷெட்டி!
TV9 Tamil News November 28, 2025 04:48 AM

நடிகை கீர்த்தி ஷெட்டி (Krithi Shetty) தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் ஒரு இளம் நடிகையாக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் படங்கள் வெளியாகி ஹிட்டாகியிருக்கிறது. அந்த வகையில் இவர் தமிழில் மட்டும் தொடர்ந்து 3 படங்களில் நடித்திருந்த நிலையில், அதில் இன்னும் எந்த படங்களும் வெளியாகவில்லை. இருந்தாலும் தமிழ் மக்களிடையே இவருக்கு வரவேற்புகள் அதிகமாகவே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) இயக்கத்தில் இவர் நடித்துவந்த படம்தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany). இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு (Pradeep Ranganathan) ஜோடியாக நடித்துள்ளார். இந்த படமானது வரும் 2025 ஆண்டு டிசம்பர் 18ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பாடல் வெளியாகி இணையத்தை கலக்கிவருகிறது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய கீர்த்தி ஷெட்டி , இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவை (SJ. Suryah) புகழ்ந்துள்ளார். மேலும் LIK படத்தின் ஷூட்டிங்கில் அவருடன் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: தொடர்ந்து 8-வது முறையாக ரஜினிகாந்த் படத்தில் ஒப்பந்தமாகும் அனிருத்? வைரலாகும் தகவல்

இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா குறித்து கீர்த்தி ஷெட்டி பகிர்ந்த விஷயம் :

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை கீர்த்தி ஷெட்டி, அதில் ” லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பட ஷூட்டிங்கின் ஆரம்பத்திலிருந்தே எனக்கு எஸ்.ஜே. சூர்யா சாரை ரொம்ப பிடிச்சிருந்தது . மேலும் ரீசெண்டாக அவர் இயக்கிய குஷி திரைப்படத்தை பார்த்தேன். அந்த படம் ரொம்பவே அழகா இருந்தது. மேலும் நான் அவருடன் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் இணைந்து நடித்திருக்கிறேன்.

இதையும் படிங்க: அதெல்லாம் வாழ்க்கையில் ஒருமுறைதான் பண்ணமுடியும்… ஆண்ட்ரியா சொன்ன விஷயம்!

அவருக்கு சினிமா என்றாலே ரொம்பவே பிடிக்கும். அவரின் அந்த ஆர்வம்தான், இதனை வருடமாக சினிமாவில் இருக்கு காரணம். மேலும் அவர் பல படங்களில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார். ஆனால் அவர் எப்போது ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்தாலும், அவரின் முழுமையாக நடிப்பையும் கொடுக்கிறார். மேலும் அவர் அவரின் கதாபாத்திரத்திற்கான உடையை அணிந்த பிறகு சேரில் உட்காரவே மாட்டார். அவர் எப்போதும் நடந்துக்கிட்டே, அவரின் ரோல் குறித்து யோசித்துக்கொண்டே இருப்பார்” என அதில் அவர் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் குறித்து அனிருத் வெளியிட்ட பதிவு :

#Pattuma 📱❤️https://t.co/BKoIED9tj7

A #WIKKI Original@pradeeponelife #VigneshShivan @IamKrithiShetty @iam_SJSuryah @SonyMusicSouth @ananthkrrishnan#LIK

— Anirudh Ravichander (@anirudhofficial)

இந்த லவ் இன்சூரன் கம்பெனி படமானது வரும் 2025 டிசம்பர் 18 ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்திலிருந்து தற்போதுவரை 2 பாடல்கள் வெளியாகியிருக்கும் நிலையில் ரிலீஸ் தேதி நெருங்குகிறது. இதன் காரணமாக இப்படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.