வரவிருக்கும் நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடரில் தி.மு.க. உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் மற்றும் விவாதிக்க வேண்டிய முக்கிய விவகாரங்கள் குறித்து முடிவெடுப்பதற்காக, நாளை (நவம்பர் 29, சனிக்கிழமை) ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. நாளை ஸ்டாலின் தலைமையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இந்தக் கூட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் டிசம்பர் 1ம் தேதி தொடங்கி டிசம்பர் 19 ஆம் தேதி வரை, மொத்தம் 19 அமர்வுகளாக நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில், பல்வேறு முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.
குற்ற வழக்குகளில் 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்கும் பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோரைப் பதவி நீக்கம் செய்வதற்கான மசோதா மற்றும் சிவில் அணுசக்தித் துறையில் தனியாருக்கு அனுமதி வழங்குவது போன்ற மசோதாக்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குளிர்கால கூட்டத் தொடரில் தி.மு.க. எம்.பி.க்கள் எந்தெந்த விவகாரங்களை எழுப்புவது, எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளது.
குறிப்பாக, தற்போது நாடு முழுவதும் பேசப்படும் எஸ்.ஐ.ஆர். (Special Intensive Revision) உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை நாடாளுமன்றத்தில் கவனப்படுத்திப் பேசுவது குறித்தும், சட்ட ரீதியான விவாதங்களை மேற்கொள்வது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இறுதி முடிவுகள் எடுக்கப்படும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!