தென்னிந்திய சினிமாவிலே தான் நடித்த 3 படங்களிலும் தொடர்ந்து ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த ஹீரோதான் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan). இயக்குநராக தமிழ் சினிமாவில் நுழைந்த இவர், அவர் இயக்குநராக அறிமுகமான படத்திலே கேமியோ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படம்தான் கோமாளி (Comali). இந்த படத்தில் நடிகர் ரவி மோகன் (Ravi Mohan) நடிக்க,பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். இந்த படமானது கடந்த 2019ம் ஆண்டில் வெளியாகியிருந்தது. இந்த படமானது முழுவதும் ஒரு டார்க் காமெடி கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக தனது இயக்கத்தில் வெளியான லவ் டுடே (Love Today) என்ற படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகியிருந்தார். இந்த படம்தான் அவர் ஹீரோவாக நடித்த முதல் படம் என்ற நிலையில் சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது.
இதை அடுத்ததாக தற்போது ஹீரோவாகவே தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார் இவர். இவரின் நடிப்பில் இந்த 2025ம் ஆண்டில் மட்டும் டிராகன் (Dragon) மற்றும் டியூட் (Dude) என இரு படங்கள் வெளியாகி ஹிட்டடியிருந்தது. மேலும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் விரைவில் வெளியாகிறது. இந்நிலையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய பிரதீப் ரங்கநாதன், ரவி மோகனின் கோமாளி படத்தின் கதையை எப்படி எழுதினார் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தேரே இஸ்க் மெய்ன் முதல் ரிவால்வர் ரீட்டா வரை… இந்த வாரம் தியேட்டரில் எந்த படத்தை பார்க்க போறீங்க?
ஹாட்ரிக் வெற்றி படங்கள் குறித்து பிரதீப் ரங்கநாதன் பகிர்ந்த வீடியோ பதிவு :கோமாளி படம் கதை உருவான விதம் குறித்து பகிர்ந்த பிரதீப் ரங்கநாதன் :Thankyou for the Hattrick 🙂 pic.twitter.com/g4iTZ2fEwk
— Pradeep Ranganathan (@pradeeponelife)
முன்னதாக பேசிய நேர்காணலில் நடிகர் பிரதீப் ரங்கநாதன், ” நான் கோமாளி திரைப்படத்தின் கதையை எழுந்தும்போது ஐ.டியில் வேலைப் பார்த்துக்கொண்டிருந்தேன். தினமும் வேலையை முடித்துவிட்டு மாலை வீட்டிற்கு வந்ததும் இந்த கோமாளி படத்தின் கதையை எழுத ஆரம்பித்தேன். ஒரு நாளைக்கு 1 பக்கம் என்ற விதத்தில் இந்த படத்தின் கதையை தொடர்ந்து எழுத தொடங்கினேன். இதை எனது ஹாபியாகவே மாற்றிவிட்டேன். தினமும் மாலையில் ஒரு பக்கம் என இந்த படத்தின் கதையை உருவாக்கினேன். இந்த மாதிரி எழுதி எழுதியே எனது கதையை முழுவதுமாக முடித்தேன்.
இதையும் படிங்க: தொடர்ந்து 8-வது முறையாக ரஜினிகாந்த் படத்தில் ஒப்பந்தமாகும் அனிருத்? வைரலாகும் தகவல்
நான் படத்தின் கதையை தொடர்ந்து எழுதும் விதத்தை விடவும், தினமும் ஒரு பக்கம் என்ற விதம் எனக்கு மிகவும் ஈசியாக இருந்தது. இதனால பலமுறை எனது கதையை என்னால் சரி பார்க்கமுடிந்தது. மேலும் கோமாளி படத்திற்கு பின் நான் வேறு ஒரு கதையைத்தான் எழுதினேன். ஒரு பெரிய ஹீரோவிற்காக அத கதையை எழுதினேன். நான் கோமாளி படம் பண்ணும்போதே நடிக்கணும் என நினைத்தேன். இந்த படத்தின் வெற்றி எனக்கு அந்த வாய்ப்பை எளிதாகவே கொடுத்தது. மேலும் பெரிய ஹீரோவிற்காக எழுதிய கதை நடக்காமல் போய்விட்டது. ஆனால் அந்த ஒரு கதையை தவிர வேறு எந்த கதையும் என்னிடம் தற்போது இல்லை” என அவர் தெரிவித்திருந்தார்.