தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை நெருங்கி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விtலை ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது.
நேற்று தங்கம் விலையை பொறுத்தவரை ஒரு கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.11,770க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் ஒரு சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.94,160க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை, நேற்று குறைந்தது சாமானிய மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியது.
இதனால் இன்றும் தொடர்ந்து தங்கம் விலை சரிவை சந்திக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் சாமானிய மக்களுக்கு மீண்டும் தங்கம் விலை உயர்ந்து ஷாக் கொடுத்துள்ளது.
.இன்று (நவம்பர் 28) தங்கத்தின் விலை எதிர்பார்த்ததற்கு மாறாக, சவரனுக்கு ₹560 உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிந்து வருவதால், நேற்று (₹240) குறைந்ததைப் போலவே இன்றும் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த உயர்வினால், 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹70 அதிகரித்து ₹11,840-க்கும், ஒரு சவரன் தங்கம் ₹94,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.