“செங்கோட்டையனின் அடுத்த மூவ்”… அதிரடியாக செய்யப்பட்ட புதிய மாற்றங்கள்… உற்று நோக்கும் அரசியல் வட்டாரம்…!!!
SeithiSolai Tamil November 28, 2025 04:48 PM

தமிழக வெற்றி கழகத்தில் நடிகர் விஜய் முன்னிலையில் நேற்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்தார். எம்ஜிஆர் காலத்தில் தன்னுடைய 20 வயதில் அரசியல் பயணத்தை தொடங்கிய அவர் இளம்வயதில் எம்எல்ஏ என்ற சாதனையை படைத்திருந்தார். கலைஞர் கருணாநிதி மற்றும் அமைச்சர் துரைமுருகனுக்கு அடுத்தபடியாக அதிக முறை எம்எல்ஏவாக இருந்தவர் செங்கோட்டையன். இவர் இரட்டை இலை சின்னத்தில் நின்று போட்டியிட்டதால் தன்னுடைய கோபி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் பின்னர் விஜய் முன்னிலையில் அவரது கட்சியில் இணைந்தார்.

அவருக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பணி மற்றும் 4 மாவட்டங்களில் அமைப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று முன்னாள் எம்பி சத்திய பாமா உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகளும் விஜய் கட்சியில் இணைந்தனர். இன்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் ஆட்சி மாற்றம் நடக்கும் என்றும் அதற்கு கண்டிப்பாக நான் விஜய்க்கு உதவுவேன் என்றும் கூறினார். அதன் பிறகு திமுக மற்றும் அதிமுக வேறு வேறு கட்சி கிடையாது எனவும் தமிழக வெற்றிகழகம் ஒரு ஜனநாயக கட்சி என்பதால் எந்த தலைவர்களின் படத்தையும் பயன்படுத்த தடை இல்லை என்றும் கூறினார்.

இந்த நிலையில் கோபி பகுதியில் உள்ள அவரது அலுவலகம் மற்றும் காரில் தற்போது புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி அவரது காரில் தவெக கொடியை மாற்றிய நிலையில் அவரது கட்சி அலுவலகத்திலும் எம்ஜிஆர் ஜெயலலிதா புகைப்படங்களுடன் விஜய் புகைப்படத்தையும் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்கள் புகைப்படத்தையும் இணைத்துள்ளார். மேலும் மூத்த தலைவர் ஆன செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.