இந்தியாவின் எல்லைப் பகுதிகளை இணைத்து நேபாளம் அரசு வெளியிட்டுள்ள 100 ரூபாய் நோட்டுகளால் சர்ச்சை..!
Seithipunal Tamil November 28, 2025 04:48 PM

நேபாளம் அரசு புதிதாக வெளியிட்டுள்ள  100 ரூபாய் நோட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் எல்லைப் பகுதிகளான உத்தரகாண்டில் உள்ள கலாபானி, லிபுலேக் உள்ளிட்ட பகுதிகளை இணைத்து இந்த புதிய நோட்டு அச்சிடப்பட்டுள்ளது. 

இந்தியா- நேபாளம் எல்லையில் லிபுலேக், லிம்பியாதுரா, கலாபானி ஆகிய பகுதிகள் உள்ளன. இவை உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளன. இந்த பகுதியை நேபாளம் உரிமை கொண்டாடி வருகின்ற நிலையில், இதனை இந்தியா நிராகரித்துள்ளது. இருப்பினும், இந்த பகுதிகளை உள்ளடக்கி, வரைபடம், ரூபாய் நோட்டுகளை நேபாளம் வெளியிட்டுள்ளது.

புதிதாக வெளியிட்டுள்ள 100 ரூபாய் நோட்டிலும் இந்த பகுதிகள் இடம்பெற்றுள்ளன. அந்நாட்டு ரிசர்வ் வங்கி ஆளுநர் கையெழுத்துடன் இந்த நோட்டுகள் வெளியாகியுள்ளன. இதனால், இரு நாடுகளுக்கு இடையே உறவு மோசமாகும் சூழ்நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.