தமிழ் சினிமாவில் ரீ-ரிலீஸ் ட்ரெண்ட் தினந்தோறும் வேகமாக வளர்ந்து வருகிறது. ரசிகர்கள் மத்தியில் கிடைக்கும் பெரும் வரவேற்பு காரணமாக முன்னணி நடிகர்களின் பழைய ஹிட் படங்கள் மீண்டும் திரையரங்குகளைத் தேடி வருகின்றன. சமீபத்தில் விஜய்–சூர்யா நடித்த Friends படம் மாபெரும் போட்டியில் ரீ-ரிலீஸ் ஆகி ரசிகர்களின் ஆட்டமே வேறலெவல் ஆனது.
அதே போக்கு இந்த வாரமும் தொடர்கிறது. வருகிற நவம்பர் 28-ம் தேதி இரண்டு பிரபல ஹீரோக்களின் படங்கள் நேரடி மோதலில் ரீ-ரிலீஸ் ஆகின்றன — அஜித்தின் அட்டகாசம், சூர்யாவின் அஞ்சான்.
2004-ஆம் ஆண்டு வெளிவந்த இந்த ரொமான்டிக்–ஆக்ஷன் படத்தை அமர்க்களம், காதல் மன்னன் போன்ற ஹிட்களை இயக்கிய சரண் இயக்கினார். அஜித்துக்கு ஜோடியாக பூஜா நடித்த இந்த படத்தில் கருணாஸ், ரமேஷ் கண்ணா, சுஜாதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பரத்வாஜின் இசை படத்தில் பெரிய ஹிட்டாகியது.முதலில் அக்டோபர் 31-ம் தேதி ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தாலும், பின்னர் தள்ளிப்போனது. தற்போது நவம்பர் 28-ம் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. டிக்கெட் புக்கிங் வேகமாக நடைபெற்று வருவதால், அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
லிங்குசாமி இயக்கிய 2014 படமான அஞ்சான், சூர்யாவின் கங்க்ஸ்டர் அவதாரத்துக்காக ரசிகர்களிடையே தனி கல்ட் following உடையது. சமந்தா ஹீரோயின், யுவன் ஷங்கர் ராஜா இசை… மாஸ் + உணர்ச்சி கலந்த படம்.விசேஷம் என்ன தெரியுமா? — படம் ரீ-எடிட் செய்து புதிய வடிவில் திரைக்கு வருகிறது. இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. புக்கிங்கும் ஜாம்பவானாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அஜித் – சூர்யா ரசிகர் மோதல் எப்பொழுதும் சினிமா தியேட்டர்களில் மெர்சல் தான். இந்த முறை ரீ-ரிலீஸ் படங்களே போட்டி போட்டுக் களமிறங்குவதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.இந்த வாரம் திரையரங்குகளே ரசிகர்களுக்கு திருவிழாதான்!