சபரிமலை சீசன் தொடங்கியதிலிருந்து பக்தர்கள் உயிரிழப்பு அதிகரித்துள்ள நிலையில், இன்று கோவையைச் சேர்ந்த முரளி (50) என்ற ஐயப்ப பக்தர் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் 9 நாட்களில் மொத்தம் 9 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி, பக்தர்களும் கோயில் நிர்வாகமும் அதிர்ச்சி அடைந்துள்ளது. கடந்த வாரம் கூட்டநெரிசல் அதிகமானதால் தரிசனத்துக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தும், உயிரிழப்புகள் தொடர்வது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பாட் புக்கிங் கோளாறு, அலைமோதும் கூட்டம், நீண்டநேர நடப்பும் ஏற்றமும் காரணமாக பல பக்தர்களுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 16 ஆம் தேதி நடை திறந்த பின் கூட்டம் மிகவேகமாக அதிகரித்து, தினமும் ஆயிரக்கணக்கானோர் தரிசனத்திற்காக வருகை தருகின்றனர். இன்று உயிரிழந்த முரளி முன்னதாகவே உடல் நலம் சரியில்லாத நிலையிலிருந்தாரா என்பது தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது.
சபரிமலை மருத்துவ ஆய்வு குழுவின் பொறுப்பாளர் பிபின் கோபால் தெரிவித்ததாவது: ஒவ்வொரு ஆண்டும் 150-க்கும் மேற்பட்ட மாரடைப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன; சராசரியாக 40 பேர் உயிரிழப்பர். இந்தாண்டு முதல் எட்டு நாட்களில் 8 மாரடைப்பு மரணங்களும், மேலும் ஒருவர் நீரில் மூழ்கி இறந்துள்ளதாகவும் கூறினார். திடீர் அதிக உடல் உழைப்பு, வேகமான ஏற்றம், மன அழுத்தம் ஆகியவை பெரும்பாலான இருதயநிலை சிக்கல்களுக்கு காரணம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!