கிரிக்கெட் மைதானத்தில் பதற்றமான தருணங்களில் விராட் கோலி உட்படப் பல விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து ‘சூயிங் கம்’ மெல்லுவதைக் கவனித்திருக்கலாம். இது ஒரு சாதாரணப் பழக்கமாகத் தோன்றினாலும், அதன் பின்னால் உண்மையான அறிவியல் உள்ளது.
நாம் கம் மெல்லும்போது, உடல் இப்போது ஆபத்தில் இல்லை என்று மூளைக்குச் சிக்னல் செல்வதால், மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அளவு குறைகிறது என்று உடற்பயிற்சி பயிற்சியாளர் குர்ஜித் சிந்து விளக்குகிறார். தானேயில் உள்ள ஜூபிடர் மருத்துவமனையின் நரம்பியல் ஆலோசகர் டாக்டர் அனிருத்த வசந்த் மோர் இதனை உறுதிப்படுத்துகிறார்.
View this post on Instagram
A post shared by G.Kaur | Fitness & Lifestyle (@_gurjit.sidhu_)
“>
மெல்லுதல் என்பது ஒரு தாளச் செயல்பாடு என்பதால், அது பாராசிம்பேடிக் நரம்பு மண்டலத்தைத் தூண்டி, தளர்வை ஊக்குவிக்கிறது. இது லேசான மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைக்கிறது.
ஒரு நாளில் எவ்வளவு கம் மெல்லலாம்?
நரம்புகளை அமைதிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கம் மெல்லுவது கவனம் (Focus), விழிப்புணர்வு மற்றும் அறிவாற்றல் செயல்திறனையும் மேம்படுத்த முடியும். மெல்லும்போது மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் 20-25% அதிகரிப்பதால், இது முடிவெடுப்பதையும், கவனம் செலுத்துவதையும் ஆதரிக்கிறது என்று டாக்டர் மோர் கூறுகிறார்.

ஹார்மோன் மற்றும் நரம்பியல் ரீதியாக இது செயல்படுகிறது. எனினும், ஆரோக்கியமான பெரியவர்கள் ஒரு நாளைக்கு 2 முதல் 4 சர்க்கரை இல்லாத கம்-களை மிதமான அளவில் மெல்லுவது பாதுகாப்பானது. அதிக அளவில் மெல்லுவது தாடை வலி, வீக்கம் போன்ற செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தலாம் என்றும் அவர் எச்சரிக்கிறார். எனவே, மன அழுத்தத்தை நிர்வகிக்கவும், கவனத்தை மேம்படுத்தவும் பல விளையாட்டு வீரர்கள் இந்த நுட்பத்தைப் பின்பற்றுகின்றனர்.