கருவுறுதல் (Fertility) என்பது ஒவ்வொரு திருமணம் செய்த பெண்ணும் விரும்பும் ஒரு விஷயமாகும். இருப்பினும், கருவுறுதல் ஒரு சிலருக்கு நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவையாக பார்க்கப்படுகிறது. திருமணமாகி பல ஆண்டுகள் கழிந்தும் தம்பதியினர் மலட்டுத்தன்மை பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். இந்த மலட்டுத்தன்மை (Sterility) அபாயத்தை பெருமளவில் குறைக்க சில பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையை தேர்ந்தெடுப்பது முக்கியம். ஒரு வருடத்திற்கும் மேலாக தம்பதியினர் உடலுறவு கொண்ட போதிலும் ஒரு பெண் கருத்தரிக்க முடியாத மற்றும் கருச்சிதைவு போன்ற சூழ்நிலை உண்டாகிறது. அந்தவகையில், துரித உணவுகள் உள்ளிட்ட கருவுறாமை அபாயத்தை அதிகரிக்கும் பிரச்சனைகள் குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: பருவ மாற்றத்தின்போது கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்ன? அதை எப்படித் தடுப்பது?
பெண்களின் கருத்தரிக்கும் திறனை பலவீனப்படுத்தும் சில முக்கியமான காரணங்கள்:சமீபத்திய ஆய்வின்படி, துரித உணவு பெண்களின் கருவுறுதலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கூறப்பட்டது. துரித உணவை தொடர்ந்து உட்கொள்வது எடை அதிகரிப்பிற்கு வழிவகுத்து, உடலுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் செய்கிறது. இது கருத்தரிக்கும் வாய்ப்புகளை குறைக்கிறது. அடிலெய்டு பல்கலைக்கழகம் 5,600 பெண்களிடம் நடத்திய ஆய்வில், துரித உணவை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் ஆபத்து 8 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் பொருள் கருத்தரித்தல் அதிக நேரம் எடுக்கும் மற்றும் உடல் ஆரோக்கியம் தொடர்ந்து மோசமடைகிறது.
கர்ப்ப காலத்தில் துரித உணவு சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்:ALSO READ: குறைப்பிரசவத்தில் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன..? நிபுணர்கள் கூறுவது என்ன..?
ரெட் மீட்:பதப்படுத்தப்பட்ட கறி, பன்றி கறி போன்றவை ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரின் கருவுறுதலையும் பாதிக்கும். அதன்படி, கருத்தரிக்க முயற்சிக்கும் பெண்கள் இந்த உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. இந்த கறி பொருட்களில் தீங்கு விளைவிக்கும் கொழுப்புகள் மற்றும் நைட்ரைட்டுகள் போன்றவை உள்ளன. இவை உடலின் ஹார்மோன் சமநிலையை சீர்குலைத்து கருவுறுதலை பலவீனப்படுத்தும்.