இந்தியாவின் பெருமை: ஈபிள் கோபுரத்தை விட உயரமான, ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள செனாப் பாலத்தின் சிறப்பம்சங்கள்..!
Seithipunal Tamil December 11, 2025 12:48 PM

ஜம்மு- காஷ்மீரில் உள்ள செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ரெயில்வே பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூன் 06-ஆம் தேதி திறந்து வைத்தார். பின்னர், அந்தப் பாலத்தின் மீது தேசியக் கொடியைப் பிடித்தபடி, பிரதமர் மோடி நடந்து சென்றார். இது நம் அனைவருக்கும் நினைவில் இருக்கும்.

இந்த ரெயில்வே பாலம் உலக வரலாற்று சிறப்பு மிக்கது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..? அதாவது, குறித்த ரெயில்வே, உலகின் மிக உயரமான  இரும்பு வளைவு பாலம் என்ற சிறப்பைப் பெற்ற்றுள்ளது. 

இந்த பாலமானது உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரெயில் பாதை திட்டத்தின் முக்கியப் பகுதியாகும். இதன்மூலம் காஷ்மீர் பள்ளத்தாக்கு நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கப்படுகிறது. சுமார் 15 ஆண்டாகக் கட்டப்பட்ட இந்தப் பாலம் உலக வாத்தியங்களில் ஒன்றானபிரான்சின் ஈபிள் கோபுரத்தைவிட உயரமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த இரும்பு வளைவு பாலம் நில அதிர்வு மற்றும் பலத்த காற்று ஆகியவற்றை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Chenab Bridge

ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ரயில் பாலம் செனாப் பாலம் (Chenab Bridge) என்று அழைக்கப்படுகிறது, இது உலகின் மிக உயரமான ரயில்வே வளைவுப் பாலமாகும் (arch railway bridge), 359 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் உயரம் கொண்டது மற்றும் நிலநடுக்கம் மற்றும் சூறாவளி காற்றைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு பொறியியல் அதிசயமாகும். 

செனாப் பாலத்தின் முக்கிய அம்சங்கள்:

அமைப்பு: இரும்பினால் கட்டப்பட்ட இந்த வளைவுப் பாலம் 1,315 மீட்டர் நீளம் கொண்டது.

அமைவிடம்: ரியாசி மாவட்டத்தில், பக்கால் மற்றும் கவுரி நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ளது.

சிறப்பு: உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் (world's highest railway bridge) மற்றும் மிக உயரமான வளைவு ரயில் பாலம் (world's highest arch railway bridge) என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

272 கி.மீ தொலைவிலான இத்திட்டப் பணிகள் சுமார் ரூ.43,780 கோடி செலவில் நிறைவு செய்யப்பட்டுள்ளது. 119 கி.மீ தொலைவு கொண்ட இந்தத் திட்டத்தில் 36 சுரங்கப்பாதைகள் மற்றும் 943 பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கத்ராவிற்கும் ஸ்ரீநகருக்கும் இடையே இந்த வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. கத்ராவில் இருந்து ஸ்ரீநகர் செல்ல சுமார் 3 மணி நேரம் மட்டுமே ஆகும். இதனால் தற்போதுள்ள பயண நேரம் 2 முதல் 3 மணி நேரம் வரை குறையும்.

திறப்பு: பிரதமர் நரேந்திர மோடியால் ஜூன் 2025-இல் திறந்து வைக்கப்பட்டது.

நோக்கம்: காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ஒரு முக்கிய ரயில்வே திட்டத்தின் ஒரு பகுதியாகும், இது போக்குவரத்து சவால்களை நீக்குகிறது. 
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.