Cancer Awarness: காலையில் இந்த 4 விஷயங்கள் செய்தால் போதும்.. புற்றுநோய் அபாயம் குறையும்!
TV9 Tamil News December 04, 2025 09:48 PM

புற்றுநோயால் (Cancer) ஆண்டுதோறும் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். புற்றுநோய் மிகவும் கொடிய மற்றும் ஆபத்தான நோயாகும். இது ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால், மரணம் நிச்சயம். இருப்பினும், பெரும்பாலான மக்கள் ஆபத்தை குறைப்பதற்கான வழிகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை. சில நல்ல காலை பழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் இந்த கொடிய நோயின் அபாயத்தைக் குறைக்கலாம் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். காலையில் சில பழக்கவழக்கங்களை செய்வது புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும். ஏனென்றால் காலையில் மேற்கொள்ளப்படும் (Morning Activites) இந்த புதிய விஷயங்கள் உங்கள் மன மற்றும் உடல் செயல்பாடுகளை முற்றிலுமாக மாற்றுகிறது. இதுபோன்ற வாழ்க்கை முறை நீண்ட காலமாகப் பின்பற்றப்படாவிட்டாலும் பிற நோய்க்கு வழிவகுக்கும்.

இந்த நான்கு எளிய காலைப் பழக்கங்களைப் பின்பற்றுவது உடலில் ஏற்படும் வாய்ப்புள்ள புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது. இது உடலின் இயற்கையான பாதுகாப்புகளை பலப்படுத்தி, செல்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.

ALSO READ: இதயத்திற்கு இந்த 6 உணவு பொருட்கள் ரகசியமாக தீங்கு தரும்.. ஏன் தெரியுமா?

உடற்பயிற்சி:

பலரும் எழுந்தவுடன் எந்தவொரு உடல் செயல்பாடுகளையும் மேற்கொள்ளாமல் உடனடியாக வேலைக்கு சென்று விடுகிறார்கள். முதலில் உடல் ஆரோக்கியத்திற்கு நடைப்பயிற்சி, யோகா மற்றும் உடற்பயிற்சி போன்றவைகளை செய்வதன் மூலம் உடலில் இரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜனை மேம்படுத்தவும். PubMed இல் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி, வழக்கமான உடற்பயிற்சி புற்றுநோயின் அபாயத்தைக் குறைத்து, குணமடைவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது என்று தெரிவித்தது.

ஆரோக்கிய காலை உணவுகள்:

காலை உணவாக ப்ரஷான பழங்கள், காய்கறிகள், நட்ஸ் மற்றும் ட்ரை ப்ரூட்ஸ் போன்றவற்றை சாப்பிடுங்கள். அதேநேரத்தில், ஓட்ஸ் மற்றும் தானியம் சார்ந்த உணவுகளை எடுத்து கொள்வது உங்கள் வளர்சிதை மாற்றம் மற்றும் குடல் பாக்டீரியாவிற்கும் நல்லது. இது நாள் முழுவதும் தேவையான ஊட்டச்சத்து மற்றும் ஆற்றலையும், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களையும் வழங்கும். இவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.

சூரிய ஒளியில் உடல் படுமாறு இருங்கள்:

காலையில் 5 முதல் 10 நிமிடங்கள் சூரிய ஒளியில் உடலை பட விடுங்கள். சூரிய ஒளி உடலின் சர்க்காடியனை மேம்படுத்தி, கார்டிசோல் மற்றும் மெலடோனின் ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துகிறது. இது டிஎன்ஏ பழுதுபார்ப்பு, நோயெதிர்ப்பு அமைப்பு வலிமை மற்றும் இரவில் நல்ல தரமான தூக்கத்திற்கு சரியான சர்க்காடியன் அளவுகளை பெற உதவும்.

புகையிலை மற்றும் மதுவை தவிர்த்தல்:

புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் எப்படியான சூழ்நிலையிலும் தீங்கு விளைவிக்கும். இது நாள் முழுவதும் உடல் செயல்பாடுகளை சீர்குலைத்து, நீண்ட காலத்திற்கு டிஎன்ஏ மற்றும் செல்களை சேதப்படுத்தி புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

ALSO READ: பெண்களுக்கு அதிகரிக்கும் தைராய்டு.. துல்லியமாக கண்டறியவது எப்படி..?

பரிசோதனை:

நல்ல பழக்கவழக்கங்கள் மற்றும் உங்களை ஆரோக்கியமாக வைத்திருந்தாலும், சில நேரங்களில் மரபணு அல்லது பிற காரணிகளால் புற்றுநோய் ஏற்படலாம். எனவே, நோயை முன்கூட்டியே கண்டறிந்து எளிதாக சிகிச்சையளிக்க வழக்கமான சுகாதார பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயைக் கண்டறிவது சிகிச்சையின் செயல்திறனை அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சி காட்டுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.