வறட்சியால் வெளியேறியவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட சொந்த ஊர் திரும்பும் நெகிழ்ச்சி!
Dinamaalai December 08, 2025 02:48 AM

சிவகங்கை மாவட்டம் குமிழன்தாவு கிராம மக்கள், கடந்த 1997-ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வறட்சி காரணமாக ஒட்டுமொத்த கிராமத்தையும் காலி செய்துவிட்டு, பிழைப்புத் தேடி வெவ்வேறு ஊர்களுக்குச் சென்றனர். இருப்பினும், இந்தக் கிராமத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மக்கள் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தில் தங்கள் சொந்த கிராமத்திற்கு வருகை தருவதைத் தவறாமல் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அந்தக் கிராமத்தில் உள்ள தூய சவேரியார் தேவாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ம் தேதி திருவிழா நடைபெறுகிறது. அதன்படி, இந்த ஆண்டும் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக, குமிழன்தாவு கிராமத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சொந்த ஊருக்குத் திரும்பி வந்துள்ளனர். அங்கு நடைபெற்ற சிறப்புத் திருப்பலியில் பங்கேற்றுப் பிரார்த்தனை செய்தனர்.

கிராமத்தை விட்டு நிரந்தரமாக வெளியேறி பல ஆண்டுகள் ஆன பின்னரும், கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் தங்கள் சொந்த மண்ணுக்குத் திரும்பி வந்து திருவிழாவைக் கொண்டாடும் இந்தக் கிராம மக்களின் செயல், அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.