பிளிப்கார்ட் Buy Buy சேல்.. நத்திங் ஸ்மார்ட்போன்கள், வாட்ச் மற்றும் இயர்பட்ஸ்களுக்கு அசத்தல் தள்ளுபடி!
TV9 Tamil News December 08, 2025 01:48 PM

உலகின் மிகப்பெரிய இ காமர்ஸ் (e Commerce) நிறுவனங்களில் ஒன்றான பிளிப்கார்ட் (Flipkart) அவ்வப்போது சேலை அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஆண்டு இறுதிக்கான பிளிப்கார்ட் பை பை சேலை (Flipkart Buy Buy Sale) தொடங்கியுள்ளது. இந்த சேலில் ஸ்மார்ட்போன்கள் முதல் மின்சாதன பொருட்கள் வரை என அனைத்திற்கும் அசத்தல் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த சேல் டிசம்பர் 05, 2025 முதல் டிசம்பர் 10, 2025 வரை நடைபெறும் என பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சேலில் நத்திங் நிறுவனனும் இறங்கியுள்ளது. அதாவது, தனது ஸ்மார்ட்போன்கள் (Smartphones), வாட்ச்கள் (Watches) மற்றும் இயர்போன்கள் (Earphones) ஆகியவற்றுக்கு அசத்தல் தள்ளுபடிகளை வழங்கியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஸ்மார்ட்போன்கள், வாட்ச்கள் மற்றும் இயர்பட்ஸ்களுக்கு ஆஃபர் அறிவித்த நத்திங்
  • நத்திங் போன் 3  (Nothing Phone 3) ஸ்மார்ட்போன் – ரூ.79,999-க்கான இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் சேலில் வெறும் ரூ.49,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • நத்திங் போன் 3 ஏ (Nothing Phone 3a) ஸ்மார்ட்போன் – ரூ.24,999-க்கான இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் சேலில் வெறும் ரூ.21,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • நத்திங் போன் 3 ஏ ப்ரோ (Nothing Phone 3a Pro) ஸ்மார்ட்போன் – ரூ.27,999-க்கான இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் சேலில் வெறும் ரூ.26,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • சிஎம்எஃப் போன் 2 ஏ ப்ரோ (CMF Phone 2a Pro) – ரூ.18,999-க்கான  இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் சேலில் வெறும் ரூ.17,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : லேப்டாப், டெஸ்க்டாப்களை இப்படி பராமரித்தால் ரொம்ப வருஷம் நல்லா யூஸ் பண்ணலாம்!

வாட்ச் மற்றும் இயர்பட்ஸ்களுக்கான சலுகை
  • சிஎம்எஃப் பட்ஸ் 2 ஏ (CMF Buds 2a) – ரூ.2,199-க்கான இந்த இயர் பட்ஸ், பிளிப்கார்ட் சேலில் வெறும் ரூ1,899-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • சிஎம்எஃப் பட்ஸ் 2 (CMF Buds 2) – ரூ.2,699-க்கான இந்த இயர் பட்ஸ், பிளிப்கார்ட் சேலில் வெறும் ரூ2,399-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • சிஎம்எஃப் பட்ஸ் 2 பிளஸ் (CMF Buds 2 Plus) – ரூ.3,299-க்கான இந்த இயர் பட்ஸ், பிளிப்கார்ட் சேலில் வெறும் ரூ2,599-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • சிஎம்எஃப் வாட்ச் ப்ரோ 2 (CMF Watch Pro 2) – ரூ.4,999-க்கான இந்த வாட்ச், பிளிப்கார்ட் சேலில் வெறும் ரூ4,199-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : சஞ்சார் சாத்தி செயலிக்கு கடும் எதிர்ப்பு.. உத்தரவை வாபஸ் வாங்கிய மத்திய அரசு!

மேற்குறிப்பிட்டுள்ள இந்த தள்ளுபடிகள் டிசம்பர் 10, 2025 வரை மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.