திடீர் டுவிஸ்ட்.! தவெகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம்.! பல்டி அடித்த காங்கிரஸ்
கு. அஜ்மல்கான் March 03, 2026 04:14 PM

திமுகவின் கூட்டணி வியூகம்

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் இறுதி அல்லது மே மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை அரசியல் கட்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக மீண்டும் ஆட்சியை தக்கவைக்க தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக கூட்டணியை பலப்படுத்த புதிய கட்சிகளை கூட்டணியில் இணைத்து வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் என தகவல் வெளியானது. குறிப்பாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2016ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட 41 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு

ஆனால் திமுகவோ கடந்த 2021ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட 25 தொகுதிகளை மட்டுமே வழங்கப்படும் என உறுதியாக தெரிவித்து விட்டது. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சியில் ஒரு பிரிவினர் தவெகவுடன் கூட்டணி அமைக்கலாம் என கருத்துகளை தெரிவித்து வந்தனர். ஒரு கட்டத்திற்கு மேலே சென்று விஜய்யை சந்தித்தும் கூட்டணி தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் திமுக- காங்கிரஸ் இடையே கூட்டணி முறியும் நிலைக்கு செல்லப்பட்டது. திமுக தலைமையோ காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியே சென்றால் செல்லட்டும் என்ற நிலைக்கு திமுக வந்தது. 

திமுக- காங்கிரஸ் மோதல்

இந்த நிலையில் தான் காங்கிரஸ் தலைமையின் உத்தரவின் படி, திமுக தலைவர் ஸ்டாலினை, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இன்று சந்தித்து பேசினார். அப்போது திமுக- காங்கிரஸ் கட்சியிடையே ஏற்பட்டுள்ள மோதல்களை குறைக்கும் வகையில் இந்த பேச்சுவார்த்தை அமையும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் கோபண்ணா கூறுகையில், திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணி முறியும் என்ற வெளியான தகவல் காங்கிரஸ் நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 தவெகவுடன் கூட்டணி- தற்கொலைக்கு சமம்

மன வருத்தத்தை உண்டாக்கியது. இந்த நிலையில் தான் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனே கார்கேவின் முயற்சியின் காரணமாக பா.சிதம்பரம் இன்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துள்ளார்.  தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம் என தெரிவித்தவர், பாஜகவை பற்றி ஒரு வார்த்தை கூட விமர்சிக்காத தவெகவுடன் எப்படி கூட்டணி அமைப்பது எனவும் கேள்வி எழுப்பினார். 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.