விமான பணிப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த பிப்ரவரி 25ம் தேதி சென்னையிலிருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமான நிலையத்தில் திருவள்ளூர் நகராட்சியின் திமுக கவுன்சிலர் பிரபாகரன் மற்றும் அவர்களின் நண்பரும் வழக்கறிஞருமான தியாகு இருவரும் பயணித்துள்ளனர். அப்போது அவர்கள் மது போதையில் இருந்த அவர்கள் 25 வயது பணிப்பெண்ணை ஒருமையில் அழைத்து உன் பெயர் என்ன? உன் ஊர் என்ன? என்றெல்லாம் கேலி செய்திருக்கிறார்கள்.. அதோடு எல்லை மீறி அந்த பெண்ணின் மீதும் கை வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இதையடுத்து அந்தப் பெண் சென்னை மீனம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.. இதையடுத்து பிரபாகரன் மற்றும் தியாக இருவரையும் போலீசார் நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினர்.. அதன்பின் பிப்ரவரி 26 ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சொல்லி அனுப்பினார்..
ஆனால் அவர்கள் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைவரானார்கள்.. இதைத்தொடர்ந்து அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
நேற்று மாலை தியாகுவும், பிரபாகரனும் டெல்லியிலிருந்து விமானத்தில் சென்னை திரும்பியபோது விமான நிலையத்தில் வைத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.. அதன்பின் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த செய்தியை அதிமுகவினரு, தவெகவினரும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து திமுகவை ட்ரோல் செய்து வருகிறார்கள்.