உஷார்..! “கொள்ளை லாபம் என ஆசை காட்டி” காதில் பூ சுற்றும் இன்ஃப்ளூயன்சர்களுக்கு செபி வைத்த அதிரடி ஆப்பு..!!
SeithiSolai Tamil March 03, 2026 06:48 PM

சமூக வலைதளங்களில் “இங்கே முதலீடு செய்யுங்கள், ஒரே மாதத்தில் கோடீஸ்வரர் ஆகலாம்” எனத் தவறான மற்றும் மிகைப்படுத்தப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து வந்த இன்ஃப்ளூயன்சர்களுக்கு எதிராக செபி (SEBI) அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இது போன்ற போலி ஆலோசனைகள் அடங்கிய சுமார் 1.2 லட்சம் பதிவுகளை இணையத்தில் இருந்து செபி அதிரடியாக நீக்கியுள்ளது. இவர்களைக் கண்டறியவே “சுதர்ஷன்” (Sudarshan) என்ற அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) செயலியை செபி உருவாக்கியுள்ளது. இந்த AI செயலி, இணையம் முழுவதும் உள்ள வீடியோக்கள் மற்றும் பதிவுகளை ஆய்வு செய்து, எவை விதிமுறைகளை மீறி முதலீட்டு ஆலோசனைகளை வழங்குகின்றன என்பதைக் துல்லியமாகக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

முறைப்படியான உரிமம் இன்றி பங்குச் சந்தை குறித்துப் பேசுபவர்களுக்கு இனி இணையத்தில் இடமில்லை என்பதை இந்த நடவடிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.