வானில் நிகழும் நிழல் விளையாட்டான இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று மாலை 6 மணி வாக்கில் தோன்ற உள்ளது. இந்த ரத்த நிலவு 6.48 மணி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திர கிரகணம் என்பது பூமி, சூரியன் மற்றும் சந்திரன் நேர்கோட்டத்தில் வரும்போது பூமியின் நிழல் சந்திரனை முழுமையாக மறைப்பதால் நிகழும் நிகழ்வு ஆகும்.
சந்திர கிரகணத்தை பொறுத்தவரை மூன்று வகைப்படும். முழு சந்திர கிரகணம், பகுதி சந்திர கிரகணம், புற நிழல் சந்திர கிரகணம் ஆகும். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெறும் முதல் சந்திரக் கிரகணம் முழு சந்திர கிரகணமாகும். இந்த நேரத்தில் சந்திரன் வெள்ளையிலிருந்து சிவப்பு/ ரத்த நிறமாக (“Blood Moon”) தோன்றும்.
சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, சூரிய ஒளி நிலவில் படாது. அந்த நிகழ்வே சந்திர கிரகணம் ஆகும். நடப்பாண்டின் முதல் சந்திர கிரகணம் வரும் இன்று நிகழவுள்ளது. சூரியனின் கதிர்கள் பூமியில் விழும்போது, அதன் நிழல் நிலவின் மீது விண்வெளியில் விழுகிறது. சந்திரன் நிழலின் திட்டுக்குள் நுழையும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
நிழலின் இணைப்பு உண்மையில் இரண்டு கூம்பு வடிவ பகுதிகளால் ஆனது - ஒன்று மற்றொன்றுக்குள் அமைந்துள்ளது. பூமி அதன் நிழலை சந்திரனில் செலுத்தும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த நிழலில் அம்ப்ரா மற்றும் பெனும்ப்ரா எனப்படும் இரண்டு வகையான நிழல்கள் உள்ளன. சந்திரன் முழுமையாக அம்ப்ரா வழியாகச் செல்லும்போது அல்லது சூரியன், பூமி மற்றும் சந்திரன் சரியாக சீரமைக்கப்படும்போது முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. சந்திரன் ஓரளவு அம்ப்ரா மற்றும் பெனும்ப்ரா வழியாக கடக்கும்போது பூமியில் பகுதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை சரியான நேர்கோட்டில் அமையாமல் இருக்கும் போது புறநிழல் சந்திர கிரகணம் நிகழும். பூமி தனது வெளிப்புற நிழலின் மூலம் சூரியனின் ஒளி நேரடியாக சந்திரனை சென்றடைவதை தடுக்கும், இது புறநிழல் என அழைக்கப்படுகிறது. பூமியின் நிழலின் இருண்ட மையத்தை விட புறநிழல் மிகவும் மங்கலானது என்பதால், புறநிழல் சந்திர கிரகணத்தை சாதாரண முழு நிலவிலிருந்து வேறுபடுத்துவது கடினம். பூமியின் நிழலின் மங்கலான, வெளிப்புறப் பகுதி வழியாக சந்திரன் நகரும்போது, பூமியிலிருந்து ஒரு புறநிழல் சந்திர கிரகணத்தைக் காண முடியும்.
ஒவ்வொரு மாதமும் சந்திரன் ஒரு நீள்வட்ட சுற்றுப்பாதையில் அல்லது ஒரு நீளமான வட்டத்தில் பூமியைச் சுற்றிச் செல்லும்போது, சந்திரன் பெரிஜீ (பூமிக்கு மிக நெருக்கமான புள்ளி) மற்றும் அபோஜீ (பூமியிலிருந்து வெகு தொலைவில் உள்ள புள்ளி) வழியாக செல்கிறது.

சந்திரன் பூமிக்கு மிக அருகில் இருக்கும்போது அல்லது அதற்கு அருகில் இருக்கும்போது, அதுவும் முழு நிலவாக இருப்பதலும், அது “சூப்பர் மூன்” என்று அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வின் போது, முழு நிலவு வழக்கத்தை விட நமக்கு சற்று நெருக்கமாக இருப்பதால், அது குறிப்பாக பெரியதாகவும் வானத்தில் பிரகாசமாகவும் தோன்றுகிறது.
சூரிய ஒளி பூமியின் காற்று மண்டலத்தில் பட்டுச் சிதறுவதால் சிவப்பு நிற அலைவரிசை, நிலவின் மேற்பரப்பில் பட்டுப்பிரதிபலிக்கும். அதனால் ஆரஞ்சு நிறத்திலிருந்து ரத்தச் சிவப்பு வரையிலான நிறங்களில் நிலா தெரியும். இதனால் ரத்த நிலா என அழைக்கப்படுகிறது. ஆகவே சந்திர கிரகணத்திற்கு பின்னர் நிலவு ரத்த சிவப்பு நிறத்தில் இருக்கும்.வழக்கத்தை விட மிகவும் பிரகாசமாக ஜொலிக்கும். இதனை ஆங்கிலத்தில் Blood Moon என்று அழைக்கின்றனர். இதனை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.
தேதி: 3 மார்ச் 2026 (செவ்வாய்க் கிழமை)
கிரகணம் தொடக்கம்: முதல் பகுதி ~ 3:20 மாலை
கிரகணம் முடிவு: 6:48 மாலை வரை (இந்த ஆண்டின் இந்த முழு சந்திர கிரகணம் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக நீடிக்கும்)
சென்னையில் பின் மாலை 6.17 மணி முதல் 6.27 வரை சந்திர கிரகணம் தெளிவாக, முழுமையாக தெரியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவின் பல பகுதிகளில் சந்திரன் உதயம் ஆகும்போது , கிரகணம் நடைபெறும். அதனால் மொத்த கிரகணத்தை முழுமையாகப் பார்க்க முடியாது. ஆனால்:
வடகிழக்கு மாநிலங்கள் (அசாம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மேற்கு வங்கம்) – முழு கிரகணத்தை சில நிமிடங்கள் அல்லது அதன் கிரகண முடிவின் போது பார்க்க முடியும். முழு சந்திர கிரகணத்தை இன்று (3.3.2026) மாலை 5.02 மணிக்கு ஆரம்பித்து 05.32 மணி வரை பார்க்கலாம்.
மத்திய/மேற்கு/தெற்கு பகுதிகள்– சந்திரன் தெரிய வரும் போது ,கிரகணம் முடிவிற்கு அருகில் இருக்கும்.அதனால் புற நிழல் சந்திர கிரகணத்தை மட்டும் காண முடியும்.
இந்நிகழ்வு வானில் நிகழும் ஒரு நிழல் விளையாட்டு. ஆகவே வெறும் கண்களால் நாம் பார்க்கலாம். இதன் மூலம் பள்ளி மாணவர்கள் இடையே வானவியல் சார்ந்த ஒரு விழிப்புணர்வையும் அவர்களின் சிந்தனையையும் தூண்ட முடியும் என்று உடுமலை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் தெரிவித்துள்ளார்.