பஞ்சாங்கம் மார்ச் 3 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்! Dhinasari Tamil %name%
ஸ்ரீராமஜயம் | ஸ்ரீராம ஜயராம ஜய ஜய ராம
!!ஸ்ரீ:!!
श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
மாசி~ 19 (3. 3.2026) செவ்வாய் கிழமை.**
வருடம் ~ விச்வாவஸு வருடம் {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ *சிசிர * ருது.
மாதம் ~ மாசி மாஸம் { கும்ப மாஸம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
*திதி ~ 5.52 pm வரை பௌர்ணமி பின் ப்ரதமை
நாள் ~ {பௌம வாஸரம்} செவ்வாய் கிழமை.
நட்சத்திரம்~ 8.09 am வரை மகம் பின் பூரம்
யோகம் ~ சுகர்மம்
கரணம் ~ பவம்
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
ராகு காலம் ~ மாலை 3.00 ~ 4.30.
எமகண்டம் ~ காலை 9.00 ~ 10.30.
நல்ல நேரம் ~ காலை 7.30 to 9.00 am and 4.30 to 5.30 pm
குளிகை ~ மதியம் 12.00 ~ 1.30.
சூரியஉதயம் ~ காலை 6.31
சந்திராஷ்டமம்~ மகரம்
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்.
ஸ்ராத்த திதி ~ கிரஹணம்
இன்று * ~ சந்திர கிரஹணம் மாலை 6.17 p.m. to 6.47 p.m.
இன்று ச்ராத்தம் செய்பவர்கள் நாளை புதன்கிழமை செய்யவும்
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்
स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
இன்றைய (3-3-2026) ராசி பலன்கள் மேஷம்வேலையாட்களின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் விவேகத்துடன் இருக்கவும். சிறுதொழில் சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். பிள்ளைகளால் ஆதரவான சூழல் உண்டாகும். புதிய இலக்குகளை பற்றிய மாறுபட்ட அணுகுமுறைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபங்கள் உண்டாகும். தெளிவுகள் பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அஸ்வினி : ஒத்துழைப்புகள் அதிகரிக்கும்.
பரணி : ஆலோசனைகள் கிடைக்கும்.
கிருத்திகை : லாபகரமான நாள்.
விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். உறவினர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கலை பணிகளில் சிந்தித்து செயல்படவும். எதிராக இருந்தவர்களை வெற்றி கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் முக்கியத்துவம் அதிகரிக்கும். வங்கி சார்ந்த துறைகளில் பொறுப்புகள் மேம்படும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
கிருத்திகை : மேன்மையான நாள்.
ரோகிணி : சிந்தித்து செயல்படவும்.
மிருகசீரிஷம் : பொறுப்புகள் மேம்படும்.
எதிலும் மன மகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். புதிய தொழில் நிமித்தமான முயற்சிகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். விளையாட்டுகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். இறை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். புதிய தொழில்நுட்ப கருவிகள் வாங்கும் எண்ணம் ஈடேறும். உடல் ஆரோக்கிய இன்னல்கள் குறையும். அனுகூலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மிருகசீரிஷம் : முயற்சிகள் அதிகரிக்கும்.
திருவாதிரை : ஆர்வம் ஏற்படும்.
புனர்பூசம் : இன்னல்கள் குறையும்.
விலகி சென்றவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிந்தனை போக்கில் மாற்றங்கள் உண்டாகும். சுப காரிய தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பயணங்கள் மூலம் புதிய வாய்ப்புகள் ஏற்படும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூசம் : மாற்றங்கள் பிறக்கும்.
ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். மற்றவர்களின் செயல்களில் தலையிடுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் கனிவான பேச்சுக்கள் வேண்டும். ஆரோக்கிய செயல்களில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். இனம் புரியாத சில சிந்தனைகளால் தயக்கங்கள் ஏற்பட்டு நீங்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : அனுசரித்து செல்லவும்.
பூரம் : விழிப்புணர்வு வேண்டும்.
உத்திரம் : தயக்கங்கள் நீங்கும்.
பணிகளிலிருந்து வந்த நெருக்கடியான சூழல்கள் குறையும். பிற மொழி பேசும் மக்களின் அறிமுகங்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். உணவு துறைகளில் திறமைகள் வெளிப்படும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : அறிமுகங்கள் ஏற்படும்.
அஸ்தம் : திறமைகள் வெளிப்படும்.
சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
எதிர்காலம் தொடர்பான முயற்சிகளும் முதலீடுகளும் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் அமைதி உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுப காரிய எண்ணங்கள் கைகூடும். மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். சேமிப்பு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
சித்திரை : முதலீடுகள் மேம்படும்.
சுவாதி : ஆதரவான நாள்.
விசாகம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
கணவன் மனைவி இடையே ஒற்றுமை ஏற்படும். சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும். வியாபாரப் பணிகளில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் மேம்படும். தன வரவுகளில் முன்னேற்றம் ஏற்படும். பழைய உறவினர்களின் சந்திப்புகள் உண்டாகும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். எதிர்ப்புகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
விசாகம் : ஆதாயகரமான நாள்.
அனுஷம் : லாபம் மேம்படும்
கேட்டை : அங்கீகாரம் கிடைக்கும்.
குடும்பத்தில் சிறு வேறுபாடுகள் தோன்றி மறையும். தெய்வீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். எதிலும் அறிவுபூர்வமாக செயல்படுவீர்கள். ஆடம்பர செலவுகளை படிப்படியாக குறைக்கவும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். வியாபார பணிகளில் சிறு சிறு மந்தங்கள் ஏற்பட்டு நீங்கும். தந்தை வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உருவாகும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மூலம் : வேறுபாடுகள் மறையும்.
பூராடம் : செலவுகள் குறையும்.
உத்திராடம் : ஆதாயகரமான நாள்.
எதிலும் கோபம் இன்றி செயல்படவும். வர்த்தக பணிகளில் முதலீடுகளை குறைத்து கொள்ளவும். புதிய கண்ணோட்டம் மூலம் மாற்றமான சூழல் ஏற்படும். திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். முக்கியமான வேலைகளை மற்றவர்களை எதிர்பார்த்து இருக்காமல் நீங்களே செய்வது நல்லது. செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். மறதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : பொறுமை வேண்டும்.
திருவோணம் : சேமிப்புகள் குறையும்.
அவிட்டம் : ஆர்வமின்மையான நாள்.
பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் மேம்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வாழ்க்கை துணை வழியில் அனுசரித்து செல்லவும். சகோதர வகையில் ஆதரவு ஏற்படும். வரவுகளால் ஆபரண சேர்க்கை உண்டாகும். வர்த்தகப் பணிகளில் லாபம் உண்டாகும். புதியவர்களின் அறிமுகங்களால் உற்சாகம் உண்டாகும். மாற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
அவிட்டம் : பொறுப்புகள் மேம்படும்.
சதயம் : அனுசரித்து செல்லவும்.
பூரட்டாதி : உற்சாகம் பிறக்கும்.
கால்நடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உடன் இருப்பவர்களை பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சில புரிதல்கள் ஏற்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். எண்ணிய சில உதவிகள் சாதகமாக அமையும். செயல்பாடுகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். அசதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
பூரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : புரிதல்கள் ஏற்படும்.
ரேவதி : சுறுசுறுப்பான நாள்
thiruvalluvar deivapulavar
தினம் ஒரு திருக்குறள்
அதிகாரம்: புலால் மறுத்தல் | குறள் 254:
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.
மு.வ உரை: அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.
தினம் ஒரு திருமுறை
மறை – 1. பதிகம் – 44 பாடல் – 1
44வது பதிக பாடல்கள் அனைத்தும் திருப்பாச்சிலாச்சிராமம் திருத்தலத்தில் பாடல் பெற்றவை ஆகும்
துணிவளர்திங்கள் துளங்கிவிளங்கச் சுடர்ச்சடை சுற்றிமுடித்துப்
பணிவளர்கொள்கையர் பாரிடஞ்சூழ வாரிடமும் பலிதேர்வர்
அணிவளர்கோல மெலாஞ்செய்துபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
மணிவளர்கண்டரோ மங்கையைவாட மயல்செய்வதோ விவர்மாண்பே .
விளக்கவுரை :
முழுமதியினது கீற்றாக விளங்கும் பிறைமதியை விளங்கித் திகழுமாறு அதனைத் தம் ஒளி பொருந்திய சடையினைச் சுற்றிக் கட்டி, பாம்புகளை அணிந்தவராய்ப் பூதங்கள் தம்மைச்சூழ எல்லோரிடமும் சென்று பலியேற்பவராய், அழகிய தோற்றத்துடன் விளங்கும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற நீலமணி போலும் கண்டத்தவராகிய இறைவர், கொல்லிமழவன் மகளாகிய இப்பெண்ணை மயல் செய்வது மாண்பாகுமோ?
தினம் ஒரு பாசுரம்நாலாயிர திவ்யப் பிரபந்தம்
முழுதும் வெண்ணெயளைந்து தொட்டுண்ணும்
முகிழிளஞ் சிறுத்தாமரைக் கையும்,
எழில்கொள் தாம்பு கொண்டடிப்பதற்கு எள்கு நிலையும்
வெண்தயிர் தோய்ந்த செவ்வாயும்,
அழுகையும் அஞ்சிநோக்கும் அந்நோக்கும்
அணிகொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும்,
தொழுகையும் இவை கண்ட அசோதை
தொல்லையின்பத்திறுதி கண்டாளே”
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்…
தினசரி .காம்
உன் மனம் தெளிவாக இருக்கும் வரை, உன்னை எவராலும் வீழ்த்த முடியாது; அடுத்த வாய்ப்பு என்று ஒன்று இருக்கும் வரை, எதற்கும் அஞ்சாதே!
உன்னால் நேற்றை சரி செய்ய முடியாது, ஆனால் நாளையை உருவாக்க முடியும்; கோபம் ஒரு நிமிட ஆவேசம், ஆனால் அதன் விளைவுகள், வாழ்நாள் பாடம்!!
ஏமாற்றங்கள் பழகிப் போகிறதே தவிர, எதுவும் மறந்து போவதில்லை; கழன்று விழும் வரை, சிலரது முகமூடிகளையும், முகம் என, நீ நம்பி கொண்டிருக்கிறாய்!!!
பஞ்சாங்கம் மார்ச் 3 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்! News First Appeared in Dhinasari Tamil