தருமபுரி, டிசம்பர் 7: தருமபுரி (Dharmapuri) அருகே அரசுப் பள்ளிக்கு அருகில் புதிதாக மதுபான கூடம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் (TVK) மற்றும் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தவெக தொண்டர்களின் ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. இதனையும் மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளே நுழைய முயன்றதால் காவல்துறையினருக்கும், தவெக நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸ் கையைக் கடித்த தவெக தொண்டரால் பரபரப்புதர்மபுரி மாவட்டம் பாலக்கோடுவில் அரசு பள்ளி செயல்படுகிறது. இதன் அருகில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் புதிதாக தனியார் மதுபான கூடம் தொடங்கப்பட்டது. மேலும் அதன் அருகே காய்கறி மார்க்கெட்டும் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு தினமும் ஆண்கள் மட்டுமல்லாது அதிக எண்ணிக்கையில் பெண்கள், குழந்தைகள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் இந்தப் பகுதியில் மதுபான கூடம் தொடங்கப்பட்டால், அது பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என எதிர்ப்புகள் கிளம்பியது.
இதையும் படிக்க : 2026 தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவும்.. சொல்கிறார் டிடிவி தினகரன்!!
இந்த நிலையில் இந்த மதுபானக் கூடத்தை உடனடியாக அகற்றக்கோரி தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அவர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் அவர்கள் தடுப்புகளை மீறி மதுபான கூடம் இருந்த இடத்துக்கு செல்ல முற்பட்டனர்.
சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம்இதனையடுத்து அவர்களைத் தடுக்க முற்பட்ட காவல்துறையினருக்கும், தவெகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களை கைது செய்ய காவல்துறையினர் முயன்றனர். இந்த நிலையில் தவெக தொண்டர் ஒருவர் காவல்துறையினரின் கையை கடித்தார். இதனால் அப்பகுதியில் மிகவும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிக்க :”தமிழகத்தின் fake id அதிமுக.. அதன் அட்மின் அமித்ஷா” – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்..
இதன் ஒரு பகுதியாக சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலானது, ஒரு பக்கம் சமூக நலன் கருதி மதுபான கூடத்தை அகற்றுவதற்கா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அனைவரும் பாராட்டி வரும் நிலையில், தொண்டர் போலீஸ் கையைடித்த சம்பவத்துக்கு விமர்சனத்தையும் பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக தவெகவினர் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக தவெக தலைவர் விஜய் வரும் டிசம்பர் 16, 2025 அன்று ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அக்கட்சியின் தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இதற்காக தனியார் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது அம்மாவட்டத்தை சேர்ந்த தவெக உறுப்பினர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.