திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள கம்பிளியம்பட்டியைச் சேர்ந்தவர் சுக்ரீவன் (எ) சூர்யா (வயது 28). இவர் மங்களப்பட்டியில் உள்ள தனது தந்தையின் அரிசி ஆலையில் (Rice Mill) வேலை செய்து வந்தார்.
வேலை முடித்து ஊருக்குத் திரும்பிய சூர்யாவை, நேற்று இரவு (டிசம்பர் 6) மர்ம நபர்கள் ஊருக்கு அருகில் உள்ள கருணாச்சியம்மன் கோவில் குளக்கரையில் வழிமறித்தனர்.
மர்ம நபர்கள், சூர்யாவின் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடினர். இன்று காலை (டிசம்பர் 7) அவ்வழியாகச் சென்றவர்கள், ரத்த வெள்ளத்தில் சூர்யா இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்துச் சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக (Postmortem) திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கொலையாளிகள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.