சென்னை அண்ணாநகரில் ஜி.எஸ்.டி அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து...! முதற்கட்ட விசாரணை என்ன...?
Seithipunal Tamil December 08, 2025 02:48 AM

சென்னை அண்ணாநகரில் உள்ள மத்திய அரசின் ஜி.எஸ்.டி ஆணையர் அலுவலகத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அலுவலகத்தின் தரைதளத்தில் தொடங்கிய தீ வேகமாக பிற பகுதிகளுக்கும் பரவியது.

மேலும், பற்றிய தகவல் தீயணைப்புத்துறைக்கு உடனுக்குடன் வழங்கப்பட்டது. 6 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீ அணைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.