Winter Health Tips: குளிர்காலத்தில் காலையில் இந்த உணவுகளா? இது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு!
TV9 Tamil News December 08, 2025 11:48 PM

குளிர்காலத்தில் (Winter) அடிக்கும் குளிரில் இருந்து தப்பிக்க பலரும் ப்ரைடு உணவுகளை தேடி விரும்பி சாப்பிடுகிறோம். ஆனால் இவற்றை சாப்பிடுவது செரிமானத்தை மெதுவாக்குகிறது. குளிர்ந்த காலநிலையில் உடல் சூடாக இருக்க கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். எனவே இந்த உணவுகளை சாப்பிடுவது வாயு மற்றும் அமிலத்தன்மை (Acidity) பிரச்சினைகளை அதிகரிக்கும். பச்சை காய்கறிகள் மற்றும் சாலடுகள் கோடையில் சுவையாக இருக்கும் என்றாலும், குளிர்காலத்தில் இவை மேலும் உடலை குளிர்விக்கின்றன. பச்சை உணவுகள் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். இது வீக்கம், வாயு மற்றும் அசௌகரியத்தை அதிகரிக்கும்.

ALSO READ: பாடாய்படுத்தும் குளிர்! இரவு முழுவதும் ஹீட்டர் ஓடுகிறதா? ஆபத்து அதிகம்!

தயிர், மோர் போன்ற குளிர்ந்த பொருட்கள்:

குளிர்காலத்தில் தயிர், மோர் போன்ற குளிர்ச்சியான பால் பொருட்கள் சளி, இருமல் போன்ற பிரச்சனைகளை அதிகரிக்கக்கூடும். இந்த உணவுகள் குளிர்காலத்தில் தொண்டை மற்றும் சைனஸை பாதிக்கலாம். அதற்கு பதிலாக சூடான பால் போன்ற மாற்று உணவுகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. குளிர்காலத்தில் கிறிஸ்துமஸ், நியூ இயர் போன்ற பண்டிகை காலங்களில் அதிகளவில் இனிப்பு உணவுகளை எடுத்து கொள்கிறோம். அதிகப்படியான சர்க்கரை எடையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியையும் பலவீனப்படுத்துகிறது. இதனால் சளி பிடிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். இவற்றிற்கு பதிலாக வெல்லம் மற்றும் பேரீச்சம்பழம் போன்ற மாற்று உணவுகள் அதிக நன்மை பயக்கும்.

டீ மற்றும் காபி:

குளிர்காலத்தில் இருந்து தப்பிக்க பலரும் டீ மற்றும் காபியை எடுத்து கொள்கிறார்கள். இவற்றை குளிர்காலத்தில் அடிக்கடி உட்கொள்வது உடலை நீர்ச்சத்து இழக்கச் செய்யும். மேலும், இது வறண்ட சருமம், சோர்வு மற்றும் தூக்கக் கலக்கத்திற்கு வழிவகுக்கும். உங்களுக்கு ஏதாவது சூடாக சாப்பிட வேண்டுமென்றால், லெமன் டீ, க்ரீன் டீ போன்றவற்றை தாராளமாக பருகலாம்.

காரமான குழம்பு வகைகள்:

பல வீடுகளில் குளிர்காலத்தில் சூடான, காரமான குழம்பு சாப்பிடுவது பிடிக்கும். இந்த உணவை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதே வேளையில், அது வயிற்றில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. செரிமானம் குறைந்து, வாயு அல்லது நெஞ்செரிச்சலுக்கு வழிவகுக்கிறது.

ALSO READ: கர்ப்ப காலத்தில் கொய்யாப்பழம் ஆரோக்கியமானதா? குளிர்காலத்தில் சாப்பிடலாமா?

இந்தப் பருவத்தில் குளிர் பானங்கள், ஐஸ்கிரீம், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த தண்ணீர், அதிகமாக வறுத்த, காரமான மற்றும் புளிப்பு உணவுகளைத் தவிர்க்கவும். துரித உணவு, பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் செயற்கை பானங்களைத் தவிர்க்கவும். தாமதமாக விழித்திருப்பதையும், சாப்பிட்ட உடனே தூங்கச் செல்வதையும் தவிர்க்கவும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.