Blinkit 'இன்ஸ்டன்ட் மருத்துவர்' சேவை: ஆன்டிபயாடிக் விநியோகத்துக்கு டாக்டர்கள் எதிர்ப்பு
WEBDUNIA TAMIL December 09, 2025 10:48 PM

ஆன்லைன் வர்த்தக செயலியான Blinkit-ன் 'இன்ஸ்டன்ட் மருத்துவர் அழைப்பு சேவை' மூலம் மருந்துச்சீட்டு தேவைப்படும் மருந்துகளை, குறிப்பாக ஆன்டிபயாடிக் மருந்துகளை, சுலபமாக பெறுவது குறித்து மருத்துவ வல்லுநர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒரு பயனர், அஸிசிப் (Azicip) போன்ற மருந்துகளை சில நிமிடங்களில், மருத்துவர் ஒருவருடன் நடத்திய ஒரு நிமிட ஆலோசனையில் ஒப்புதல் பெற்று வாங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தனியார் ஊடகம் ஒன்று நடத்திய சோதனையில், 'டாக்டர் ஐமன்' என்று மட்டும் அடையாளம் கூறிய ஒரு மருத்துவர், எந்த பரிசோதனைகளும் இல்லாமல் ஆன்டிபயாடிக் மருந்துக்கு சீட்டு வழங்கியுள்ளார். இது "முற்றிலும் தவறு" மற்றும் "அபாயகரமானது" என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

சரியான மருத்துவ பரிசோதனை இல்லாமல் ஆன்டிபயாடி வழங்குவது, இந்தியாவில் ஏற்கெனவே தீவிரமாக உள்ள நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன் நெருக்கடியை மேலும் மோசமாக்கும்.

மத்திய அரசின் தொலைமருத்துவ வழிகாட்டுதல்கள், குறிப்பிட்ட கட்டுப்பாடுகளின்றி ஆன்டிபயாடிக் மருந்துகளை இவ்வாறு பரிந்துரைக்கக் கூடாது என்று தெளிவாகக் கூறுகின்றன.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.