“நாமெல்லாம் ஒரே சொந்தம்தான்!” – புதுச்சேரியில் உணர்ச்சிப் பூர்வமாகப் பேசிய தளபதி விஜய்! – 30 ஆண்டுகால பாசத்தை நினைவுகூர்ந்தார்..!!!
SeithiSolai Tamil December 09, 2025 10:48 PM

புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் இன்று (டிசம்பர் 9) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்புப் பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவர் விஜய், “புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாடும், புதுச்சேரியும் தனித்தனியாக இருந்தாலும், நாமெல்லாம் ஒன்றுதான்; அனைவரும் ஒரே சொந்தம்தான். உலகின் எந்த இடத்தில் தமிழர்கள் இருந்தாலும் அவர்கள் நம் சொந்தம்தான்,” என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.

மேலும், புதுச்சேரி மக்கள் தன் மீது வைத்துள்ள பாசத்தை நினைவுகூர்ந்த விஜய், மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். 1976-இல் தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்கு முன்னர், 1974-ஆம் ஆண்டிலேயே புதுவையில்தான் முதலில் வெற்றி பெற்றார் என்ற வரலாற்றுத் தகவலைச் சுட்டிக்காட்டினார். “30 ஆண்டுகளாக புதுவை மக்கள் என்னை தாங்கிப் பிடிக்கின்றனர். அதனால், தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, புதுச்சேரிக்கும் சேர்த்து நான் நிச்சயம் குரல் கொடுப்பேன்,” என்று விஜய் உரையாற்றினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.