கோவாவில் உள்ள "Birch by Romeo Lane" இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, கிளப்பின் உரிமையாளர்களான கௌரவ் மற்றும் சௌரப் லூத்ரா ஆகியோர் விபத்து நடந்த சில மணி நேரங்களிலேயே தாய்லாந்துக்கு தப்பிச் சென்றது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விபத்து சனிக்கிழமை இரவு நடந்த நிலையில், இரு உரிமையாளர்களும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு விமானம் மூலம் தாய்லாந்துக்கு தப்பி சென்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இண்டிகோ விமானம் 6E-1073 மூலம் தாய்லாந்துக்கு தப்பிச் சென்றுள்ளனர். இதன் மூலம் அவர்கள் போலீஸ் விசாரணையை வேண்டுமென்றே தவிர்ப்பதை உறுதி செய்வதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
விசாரணைக்கு அஞ்சி அவர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களை தேடி டெல்லி சென்ற போலீஸ் குழு, வீட்டிற்கு நோட்டீஸ் ஒட்டியதுடன், லுக் அவுட் சர்க்குலரும் பிறப்பித்தது.
உரிமையாளர்களை கைது செய்ய கோவா காவல்துறை, சிபிஐயின் இன்டர்போல் பிரிவை தொடர்புகொண்டுள்ளது. இதற்கிடையில், மூன்றாவது குற்றவாளியான பாரத் கோலி கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக கோவாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
Edited by Siva