"நீலாம்பரி என்ற தலைப்பில் `படையப்பா 2' படத்தை திட்டமிடுகிறோம்- ரஜினிகாந்த்
Top Tamil News December 09, 2025 11:48 PM

நீலாம்பரி என்ற தலைப்பில் `படையப்பா-2' படத்தை திட்டமிடுகிறோம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

’படையப்பா’ நினைவுகள் குறித்து வீடியோ வாயிலாக பேசிய ரஜினிகாந்த், “டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் பிறந்தநாளன்று "படையப்பா" திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது. என் திரை வாழ்வில் படையப்பா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தப் பட நினைவுகள் சிலவற்றை  உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். பொன்னியின் செல்வனில் வரும் நந்தினியின் கேரக்டர் எனக்கு ரொம்ப பிடித்தது. நந்தினியை வைத்து எனது மனதில் தோன்றிய கதைதான் படையப்பா. படையப்பாவின் ”நீலாம்பரி” கேரக்டரில் ஐஸ்வர்யா ராய் நடிக்க வேண்டும் என்றுதான் நான் ஆசைப்பட்டேன்.


திடீரென ’படையப்பா’ என்ற பெயர் எனது மனதில் தோன்றியதால் அதையே படத்துக்கு வைத்து விட்டோம். படையப்பா படத்தை எடுத்து கொண்டிருந்த சமயத்தில் ஜெயலலிதாவை மையமாக வைத்துதான் நீலாம்பரி பாத்திரம் என புரளிகள் கிளம்பியது. 1996ல் அவருக்கு எதிராக நான் பேசி இருந்தேன். படம் வெளியான பின் ஜெயலலிதா படத்தை பார்க்க வேண்டுமென விரும்பினார். அப்போது கலைஞர்தான் முதலமைச்சர், அவர் பாராட்டினார். ஜெயலலிதாவுக்கு காட்ட வேண்டாமென சிலர் பயந்தனர். ஆனால் இதில் என்ன இருக்கிறது என ரீலை போயஸ் கார்டன் இல்லத்துக்கு அனுப்பினேன். படம் நன்றாக இருக்கிறது என சொன்னார் என கேள்வி பட்டேன்.

படையப்பா 2 ஏன் பண்ணக்கூடாது என்று எனக்கு தோன்றியது. அடுத்த ஜென்மத்திலாவது உன்னை பழிவாங்காமல் விடமாட்டென் என நீலாம்பரி சொல்லியிருக்கிறார். எனவே நீலாம்பரி என்ற டைட்டிலுடன் படையப்பா 2 கதைக்கான பேச்சுவார்த்தை சென்றுகொண்டிருகிறது. நான் செத்துபோனா என் உடம்பு கூடயே நீ வரியாடா-ன்னு சிவாஜி சார் கேட்டார். சிவாஜி சார் இறந்ததுக்கு பிறகு அவரின் உடல் வைத்திருந்த வாகனத்தில் கடைசி வரை போனேன், "‘2.0', ‘ஜெயிலர் 2' என இரண்டாம் பாக படங்கள் பண்ணும்போது, ஏன் 'படையப்பா 2' பண்ணக்கூடாது என்று தோன்றியது. 'நீலாம்பரி: படையப்பா 2'தான் டைட்டில். அதற்கான கதை விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. கதை நன்றாக வந்தால் ரசிகர்களுக்கு திருவிழாவாக இருக்கும்.” என்றார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.