அதிர்ச்சி... மகளை கொன்று தாய் தற்கொலை முயற்சி!
Dinamaalai December 16, 2025 02:48 AM

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே குடும்ப வறுமை காரணமாக 7 வயது மகளுக்கு அரளிக்காயை அரைத்துக் கொடுத்து கொலை செய்துவிட்டு, தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாளையம்பட்டி போஸ்டல் காலனியை சேர்ந்த முனீஸ்வரி என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது கணவர் இறந்த நிலையில், குடும்பம் நடத்த போதிய வசதி இல்லாமல் சிரமம் அடைந்து வந்துள்ளார்.

இந்நிலையில், தனது மூத்த மகள் பள்ளிக்குச் சென்ற நேரத்தில் முனீஸ்வரி, தனது இளைய மகள் சபரிஷாவுக்கு அரளிக்காயை அரைத்து குடுத்து விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. பள்ளி முடிந்து வந்த மூத்த மகள், தனது தாய் மற்றும் தங்கை மயங்கிக் கிடப்பதை கண்டு உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

இருவரையும் மீட்டு சிகிச்சைக்குக் கொண்டு சென்ற நிலையில், சபரிஷா உயிரிழந்தார். இதனையடுத்து, மருத்துவமனையில் தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவலறிந்து சென்ற போலீசார் தாய் மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.