ஆளே மாற்றிட்டாரே... 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் கம்பேக் கொடுக்கும் 'காதல்' சந்தியா!
Dinamaalai December 16, 2025 02:48 AM

கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான 'காதல்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகை சந்தியா, திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்த நிலையில், தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிப்புத் துறைக்குத் திரும்பி உள்ளார். அவரது இந்தத் திரைப் பயணத் திரும்புதல், அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

'காதல்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சந்தியா, முதல் படத்திலேயே தனது அசாத்திய நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து, 'டிஸ்யூம்', 'வல்லவன்' உட்படப் பல வெற்றிப் படங்களில் நடித்தார். தமிழ்த் திரைப்படங்கள் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துத் தென்னிந்திய அளவில் பிரபலமானார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு, சாஃப்ட்வேர் துறையில் பணியாற்றும் சந்திரசேகரன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகுத் தன் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்துவதற்காகச் சினிமாவிலிருந்து விலகி இருந்தார். சினிமாவிலிருந்து விலகி இருந்த சந்தியா, இப்போது 10 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிப்புக்குத் திரும்பி உள்ளார்.

முதற்கட்டமாக, அவர் ஒரு வெப் தொடரில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புச் சென்னையில் சில தினங்களுக்கு முன்புதான் தொடங்கியது. இதில் நடிகை சந்தியாவுடன், விக்ராந்த் கதாநாயகனாக நடிக்கிறார். பாடினி குமார் உள்ளிட்டப் பல நடிகர்களும் இதில் இடம்பெற்றுள்ளனர். வெப் தொடரைத் தொடர்ந்து, 'காதல்' சந்தியாவை ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க வைப்பதற்கானப் பேச்சுவார்த்தைகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.