தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநல 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலையொட்டி அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு படிவங்களை பெற ஏராளமான நிர்வாகிகள் குவிந்தனர்.

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, முதல் நாளான இன்று (15.12.2025 திங்கட் கிழமை), சென்னை, இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விருப்பம் தெரிவித்து, மொத்தம் 1,237 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில், கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்’ திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் ‘தங்களது தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து’ 349 விருப்ப மனுக்களும்,கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள், தங்களுக்கு போட்டியிட வாய்ப்பு வேண்டி 888 விருப்ப மனுக்களும் பெறப்பட்டுள்ளன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.