Jana Nayagan: தளபதி ரசிகர்களே தயாரா? அனைவரும் எதிர்பார்த்த ஜன நாயகன் அப்டேட் இதோ!
TV9 Tamil News December 16, 2025 05:48 AM

இயக்குநர் ஹெச்.வினோத் (H. Vinoth) இயக்கத்தில் வரும் 2026ம் ஆண்டில் வெளியீட்டிற்கு தயாராகிவரும் பிரம்மாண்ட படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படமானது தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) கடைசி திரைப்படம் என்பதால் அதிக எதிர்பார்ப்புகள் இருந்துவருகிறது. அந்த வகையில் இப்படத்தில் தளபதி விஜய் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) இணைந்து நடித்துள்ளார். மேலும் நடிகை மமிதா பைஜூவும் (Manitha Baiju) இதில் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயின் கடைசி படம் என்ற நிலையில், இந்த் படத்திற்கு எந்தளவிற்கு எதிர்பார்ப்புகள் இருக்கிறதோ, அதைப்போல வசூலும் அதிகமாகவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichandar) இசையமைத்துள்ளார்.

இவரின் இசையமைப்பில் “தளபதி கச்சேரி” (Thalapathy Kacheri) என முதல் பாடல் கடந்த 2025 நவம்பர் மாதத்தில் வெளியன் நிலையில், தற்போது 2வது பாடல் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு குறித்த படக்குழு அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜன நாயகன் படத்தின் 2வது பாடலின் அப்டேட் நாளை 2025 டிசம்பர் 16ம் தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இது தற்போது விஜய் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 19 ஆண்டுகளை நிறைவு செய்தது தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படம்!

ஜன நாயகன் படத்தின் 2வது பாடல் குறித்து அறிவிப்பை வெளியிட்ட படக்குழு :

Calm before the storm ends today 😁

From Tomorrow.. Verithanama vibe-avalama 🧨#JanaNayagan#JanaNayaganPongal#JanaNayaganFromJan9 pic.twitter.com/AGd5p2KGlo

— KVN Productions (@KvnProductions)

ஜன நாயக ன் படத்தின் வெளிநாடு ரிலீஸ் நேரம் எப்போது :

இப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படமானது கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகளில் திரையிடப்படவுள்ளதாம். மேலும் தளபதி விஜய்யின் கடைசி படம் என்பதால் உலக தமிழ் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இந்த் படம் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் டெஹதியில் காலை 8ம் மணி முதலே வெளிநாடுகளில் படம் வெளியாகவுள்ளதாம். இது கணக்குப்படி பார்த்தல், தமிழகத்தில் 9ம் மணிக்கு இப்படம் வெளியாகும் நிலையில், 1 மணி நேரத்திற்கு முன்பே வெளிநாடுகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தனுஷ் பட இயக்குநருடன் இணையும் நடிகர் ஷண்முகப் பாண்டியன் – வைரலாகும் வீடியோ

இது தொடர்பான அறிவிப்பும் வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது. இப்படமானது பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என பலரும் கூறிவரும் நிலையில், இந்த படத்தின் டீசரோ அல்லது ட்ரெய்லரோ வெளியானால்தான் எது உண்மை என தெரியவரும். இதுவரை இப்படத்திலிருந்து 1ல் பாடல் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில், 2வது பாடலுக்கு பின் எது உண்மை என முழுமையாக தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.