கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர், போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் 14ம் தேதி, சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் ஒருவர், திருப்பூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தார். இந்தத் தகவலைத் தொடர்ந்து, திருப்பூர் ரயில்வே போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் ரயில் நிலையம் முழுவதும் நீண்ட நேரம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்காததால், அது வெறும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வந்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில், மிரட்டல் விடுத்த நபர் சென்னையைச் சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டது.
சென்னை வேளச்சேரி அருகே உள்ள நேரு நகரைச் சேர்ந்த சதீஸ் (40) என்பவரே அந்த மிரட்டலை விடுத்தவர். இவர் டிரைவராகப் பணியாற்றி வருகிறார். நேற்று திருப்பூர் ரயில் நிலைய பார்சல் புக்கிங் அலுவலகம் அருகே நின்றுகொண்டிருந்த சதீஸை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்தனர்.
தற்போது ரயில்வே போலீசார் சதீஸிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எதற்காக அவர் இத்தகைய மிரட்டலை விடுத்தார், இதன் பின்னணியில் வேறு யாராவது இருக்கிறார்களா அல்லது போதை மயக்கத்தில் இதைச் செய்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!