"ஓபிஎஸ், டிடிவி இணைப்பை டெல்லி பார்த்துகொள்ளும்; விஜய் சினிமாவுக்கே போகட்டும்"- தமிழிசை சௌந்தரராஜன்
Vikatan December 17, 2025 10:48 PM

சென்னையில் பாஜக மையக்குழு கூட்டம் இன்று (டிச.17) நடைபெற்றது.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், "பாஜக -வின் வருங்காலத் திட்டத்தைப் பற்றித் திட்டமிட்டிருக்கிறோம்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எங்களது வியூகத்தை வகுத்திருக்கிறோம்.

தவெக தலைவர் விஜய்

பொங்கல் சமயத்தில் பிரதமர் மோடி வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. பேச்சாளர் பயிற்சி முகாம், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் மூலம் வலுவான பதிவைத் தமிழகம் முழுவதும் பதிய வைக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறோம்.

ஓபிஎஸ், டிடிவி இணைப்பை எல்லாம் டெல்லி பார்த்துக்கொள்ளும். திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசுக்கு எனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "விஜய் எங்களுடன் கூட்டணிக்கு வந்தால் வரட்டும், இல்லையென்றால் அவர் சினிமாவுக்கே போகட்டும். மற்றபடி, விஜய் தனித்து நிற்பதால், எந்தப் பிரயோஜனமும் இல்லை" என்று விமர்சித்திருக்கிறார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.