மகாராஷ்டிர மாநில விளையாட்டுத்துறை அமைச்சரும், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான மாணிக்ராவ் கோடேவுக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனையை நாசிக் செசன்ஸ் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
1995-ம் ஆண்டு, தான் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர் என பொய் கூறி அரசு ஒதுக்கீட்டில் வீடு பெற்றதாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கீழ் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் விதித்த தண்டனையை எதிர்த்து அவர் செய்த மேல்முறையீட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் எம்.எல்.ஏ அல்லது எம்.பி பதவி உடனடியாக பறிக்கப்பட வேண்டும்.
முன்னதாக ராகுல் காந்திக்கு தண்டனை விதிக்கப்பட்டபோது அவரது பதவி உடனடியாக பறிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, மாணிக்ராவ் கோடேவின் பதவியையும் பறிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
தண்டனை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மாணிக்ராவ் தரப்பு ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தை நாட திட்டமிட்டுள்ளது. முறைகேடாக பெற்ற வீட்டை திரும்ப பெற வேண்டாம் என வீட்டு வசதி வாரியத்திற்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva