சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அதிமுக-பாஜக தவிர வேற கட்சிகள் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து எந்த முடிவும் எடுக்காத நிலையில், கூட்டணி சிதைந்துவிட்டதாக தி.மு.க. தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில், ராணிப்பேட்டையில் நேற்று (டி.16) நடைபெற்ற பா.ஜ.க.வின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “தை பிறந்தால் வழி பிறக்கும். அதன்பின் பல கட்சிகள் நம் கூட்டணிக்கு வரும்” என்று உறுதியுடன் தெரிவித்தார். இதன் மூலம், தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தை மாதத்திற்குப் பிறகு விரிவடையும் என்றும், பல கட்சிகள் புதிதாக இணையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.