தீயசக்தின்னு சொன்னா பராசக்திதான்!.. ஜனநாயகனுக்கு வச்சிட்டாங்க செக்!…
CineReporters Tamil December 19, 2025 10:48 PM

நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியதில் இருந்தே திமுகவை மட்டுமே கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். மற்ற கட்சிகள் பற்றி அவர் பேசுவதே இல்லை. இன்னும் சொல்லப்போனால் திமுகவை மட்டுமே தனது எதிரியாக நினைக்கிறார் விஜய். வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டி என்றெல்லாம் தொடர்ந்து சொல்லி வருகிறார் விஜய்.

அதுவும் கரூர் சம்பவத்திற்கு பின் திமுகவின் மீதான விஜயின் கோபம் மிகவும் அதிகரித்திருக்கிறது. ஏனெனில், அந்த சம்பவத்திற்கு பின்னணியில் திமுகதான் இருப்பதாக விஜய் நினைக்கிறார்.
அந்த சம்பவம் நடந்தவுடனேயே அவர் வெளியிட்ட வீடியோவில் கூட அவரின் பேச்சை அப்படித்தான் இருந்தது.

vijay (1)

மேலும், நேற்று ஈரோடு பெருந்துறையில் பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய் ‘திமுக ஒரு தீய சக்தி’ என்று குறிப்பிட்டார். மேலும் தீய சக்திக்கும் தூய சக்தியான தவெகவுக்கும் இடையேதான் தேர்தலில் போட்டி என்றும் பேசியிருந்தார்.

இது ஆளுங்கட்சி தரப்புக்கு கோபத்தை ஏற்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது. ஒரு பக்கம் விஜயின் கடைசிப்படமான ஜனநாயகன் 2026 ஜனவரி 9ம் தேதியும், சுதாகொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள பராசக்தி திரைப்படம் ஜனவரி 14-ம் தேதியும் வெளியிட திட்டமிட்டனர்.

இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம்தான் தமிழகத்தில் வெளியிடுகிறது. விஜய் நேற்று ஈரோட்டில் பேசியது கோபத்தை ஏற்படுத்த ஜனவரி 10ம் தேதியே பராசக்தியை ரிலீஸ் செய்யுங்கள் என உதயநிதி கறாராக சொல்லிவிட்டாராம்.

விஜய் பேசிய அரசியல் அவரின் ஜனநாயகன் படத்தின் வசூலை பாதிக்கும் என தெரிகிறது. ஏனெனில் கண்டிப்பாக முக்கிய, பெரிய தியேட்டர்களை பராசக்தி படத்திற்காக ஒதுக்கிவிடுவார்கள். இதையெல்லாம் மீறிதான் ஜனநாயகன் வெற்றி பெறவேண்டும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.