#BREAKING தமிழ்நாட்டில் 95 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கம்
Top Tamil News December 19, 2025 10:48 PM

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மூலம் 95 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மூலம் 95 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகபட்சமாக சென்னையில் 14 லட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்  செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல்லில் 14,66,660 வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 706 பேர் நீக்கம் செய்யப்பட்டு, 12 லட்சத்து 72 ஆயிரத்து 954 பேர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். சேலம் மாவட்டத்தில்
SIR என்னும்  சிறப்பு தீவிர திருத்த பணிக்கு பிறகு வெளியிடப்பட்ட வரைவு  வாக்காளர் பட்டியலில் 3 லட்சத்து 62 ஆயிரத்து 429 பேர் நீக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026-ன் படி 84,329 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதியில் எஸ்ஐஆர் சீரமைப்பு பிறகு    6,19,777 வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் 3,31,787 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,17,364 வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 368 வாக்காளர்கள் பெயர் நீக்கம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்த முகாமிற்கு பின், 1,74,549 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சத்து 74 ஆயிரம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளின் வாக்காளர் பட்டியலில் இருந்து 2,15,025 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு 1,25,739 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,52,162 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் SIR - க்கு பிறகு நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை- 7,01,871. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் 3 லட்சம் 24ஆயிரத்து 894 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்களில் 11 சதவீதம்  பேர்  வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளின் போது வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தின் 8 தொகுதியில் 5 லட்சத்து 63 ஆயிரத்து 785 வாக்காளர்கள் என 23 சதவீத வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற்ற எஸ்ஐஆர் பணியில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 587 வாக்காளர்கள் நீக்கம். நெல்லையில்  2,14,957 வாக்காளர்கள் நீக்கம். 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.