“பெத்த கடனுக்கு இதுதான் பரிசா?”.. முதியோர் இல்லத்தில் தந்தையை விட்ட மகன்.. அந்த பெண் கேட்ட ஒற்றைக் கேள்வி.. கதிகலங்கி நின்ற மருமகள்! வைரல் வீடியோ!
SeithiSolai Tamil December 19, 2025 10:49 PM

உடல்நலம் குன்றி, தன்னிச்சையாக உணவு உண்ணவோ அல்லது நடமாடவோ இயலாத நிலையில் உள்ள தனது வயதான தந்தையை, மகன் மற்றும் மருமகள் ஆகிய இருவர் முதியோர் இல்லத்தில் சேர்க்கும் உருக்கமான வீடியோக் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பலரது இதயங்களையும் கனக்கச் செய்துள்ளது.

அந்த வீடியோவில், முதியோர் இல்லத்துப் பெண்மணி ஒருவர், “உங்களுக்கு நடக்கக் கற்றுக்கொடுத்து, ஆளாக்கிய தந்தையை இன்று அவர் தள்ளாடும்போது கைவிடுவது முறையா?” எனக் கேள்வி எழுப்பியதோடு, “நாளை உங்கள் பிள்ளைகளும் உங்களை இதே நிலைக்குத் தள்ளக்கூடும்” என்று கூறிய எச்சரிக்கை, அந்த மகனை மௌனத்தில் ஆழ்த்தியது.

“>

 

இக்காணொளி 3.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ள நிலையில், முதியோரைப் பராமரிப்பது ஒவ்வொரு பிள்ளையின் தார்மீகக் கடமை என ஒரு தரப்பினரும், பணிச் சூழல் மற்றும் நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என மற்றொரு தரப்பினரும் என இணையதளங்களில் இது குறித்த விவாதம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.