"பேரே வரலாறு" விஜய்யின் 'ஜனநாயகன்' சிங்கிள் பாடலும் ஈரோடு மாநாடும்..!
Webdunia Tamil December 19, 2025 10:49 PM

விஜய் ரசிகர்களுக்கு ’ஜனநாயகன்’ சிங்கிள் பாடல் மற்றும் ஈரோடு மாநாடு என இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது. ஈரோடு மக்கள் சந்திப்பில் விஜய் ஆற்றிய அனல் பறக்கும் அரசியல் உரை ஒருபுறம் என்றால், அவரது கடைசி திரைப்படமான 'ஜன்னநாயன்' படத்தின் இரண்டாவது சிங்கிளான "பேரே வரலாறு" பாடல் வெளியாகி இணையத்தை அதிர வைத்துள்ளது.

அரசியலிலும் சினிமாவிலும் ஒரே நேரத்தில் விஜய் நிகழ்த்தி வரும் இந்த தாக்கம், 2026 தேர்தலுக்கான ஒரு வலுவான அடித்தளமாகவே பார்க்கப்படுகிறது.

விஜய்யின் ஆஸ்தான பாடலாசிரியர் விவேக், இப்பாடலில் வரிகளை மிக நேர்த்தியாக செதுக்கியுள்ளார். ஒரு சினிமா நாயகனுக்கான பில்ட்-அப் என்பதை தாண்டி, நிஜ வாழ்க்கையில் விஜய் தற்போது சந்தித்து வரும் அரசியல் எதிர்ப்புகள், விமர்சனங்கள் மற்றும் அவரது புதிய பயணம் ஆகியவற்றை இப்பாடல் வரிகள் பிரதிபலிக்கின்றன.

"பேரே வரலாறு" என்பது வெறும் டைட்டில் மட்டுமல்ல, அவர் அரசியலில் தடம் பதிக்க போவதை சூசகமாகச் சொல்லும் ஒரு பிரகடனமாகவே உள்ளது.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.