சென்னை குடிநீர் வாரியத்தின் முக்கிய அறிவிப்பு,"வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், மணலி காமராஜர் சாலையில் அமைந்துள்ள திருவொற்றியூர் நீருந்து நிலையத்தில் 1 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, அந்த நிலையத்தில் உள்ள முக்கிய குடிநீர் குழாயை மாற்றி அமைக்கும் தொழில்நுட்பப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.இந்த பணிகள் காரணமாக, 22-ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் 24-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணி வரை, மொத்தம் 48 மணி நேரத்திற்கு, திருவொற்றியூர் மற்றும் மணலி நீருந்து நிலையங்கள் செயல்படாது என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

இதனால், திருவொற்றியூர் மற்றும் மணலி மண்டலங்களுக்குட்பட்ட கத்திவாக்கம், எண்ணூர், எர்ணாவூர், திருவொற்றியூர், காலடிப்பேட்டை, சடையன்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் குழாய்கள் வழியாக வழங்கப்படும் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
இந்த சூழ்நிலையில், பொதுமக்கள் முன்கூட்டியே தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள குடிநீர் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. அவசர குடிநீர் தேவைகளுக்கு, லாரிகள் மூலம் குடிநீர் பெற வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://cmwssb.tn.gov.இந்த மூலம் பதிவு செய்து பயன்பெறலாம்.
மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் குறைந்த அழுத்தம் காணப்படும் இடங்களில், குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் வழக்கம்போல் எந்தத் தடையுமின்றி தொடரும் எனவும் சென்னை குடிநீர் வாரியம் உறுதி தெரிவித்துள்ளது.