விஜய் நடிக்கும் கடைசி படம் ஜனநாயகன். இந்தப் படத்தை எச்.வினோத் இயக்கியிருக்கிறார். படத்தை கேவிஎன் புரடக்ஷன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படம் பொங்கல் ரிலீஸாக ஜனவரி 9 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இன்னொரு பக்கம் விஜய் அரசியலில் முழுத்தீவிரமாக இறங்கி வேலை செய்திருக்கிறார். அதுவும் ஆளும்கட்சியை எதிர்த்து தன்னுடைய கடுமையான விமர்சனத்தை முன் வைத்து வருகிறார்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இரண்டே கட்சிகளுக்குத்தான் போட்டி என தன்னுடைய எதிர்ப்பை தொடர்ந்து காட்டி வருகிறார் விஜய். கரூர் சம்பவத்துக்கு பிறகு முதன் முறையாக தமிழ் நாட்டில் ஈரோட்டில் அவர் நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் விஜய் வெறி கொண்டு பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக திமுகவை தீய சக்தி என சொன்னது அரசியலில் பெரும் களக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இன்னொரு பக்கம் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளான படமாக ஜன நாயகன் திரைப்படம் இருக்கிறது. விஜயின் இந்த பேச்சால் அந்தப் படத்தின் ரிலீஸுக்கு பிரச்சினை வருமே? ஆனால் இதெல்லாம் தெரியாமலா விஜய் இப்படி பேசுவார். என்ன நடந்தாலும் பரவாயில்லை. நான் பார்த்து கொள்கிறேன். ஒரு வேளை படத்தின் தயாரிப்பாளருக்கு ஏதாவது ஒரு வகையில் பிரச்சினை வந்தாலும் அதை நானே ஏற்றுக் கொள்கிறேன் என்ற வகையில்தான் விஜய் துணிந்து இவ்வாறெல்லாம் பேசி வருகிறார் என்று சொல்லப்படுகிறது.
ஆனால் எடுத்த அடியில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டார் விஜய் என்பது திரையுலகினரை சேர்ந்தவர்களுக்கு தெரியும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் வரை ஓயவும் மாட்டார். அதனால் அரசியலில் என்ன வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்றுதான் இறங்கியிருக்கிறார். இதற்கிடையில் விஜய்க்கு எதிராக திரையுலகினரை திருப்பவும் இங்கு சதி நடந்து கொண்டிருக்கிறது.
அதற்கு ஒரு உதாரணம் ஜன நாயகன் படத்தோடு பராசக்தி படத்தை மோதவிடுவதுதான். பெரும்பாலும் இரு பெரிய நடிகர்களின் படங்களை ஒன்றாக ஒரே தேதியில் ரிலீஸ் செய்ய யோசித்துதான் செய்வார்கள். ஆனால் இது வேண்டுமென்றே நடப்பதாகவே தெரிகிறது. இதனால் இரு படங்களின் வசூலும் நினைத்த அளவு வராது என்பதுதான் உண்மை. இதில் இன்னொரு விஷயம் என்னவெனில் ஜனவரி 9 ஜன நாயகன் படம் ரிலீஸ்.
அதே மாதம் ஜனவரி 23 ஆம் தேதியில் அஜித்தின் பெரிய கமெர்ஷியல் ஹிட் படமான மங்காத்தா படத்தையும் ரீ ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். இதுவும் ஜன நாயகன் படத்தின் வசூலை டார்கெட் செய்தே மங்காத்தா படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.